| 92 | வண்ணனை மொழிநூலின் வழுவியல் |
| அவற்றினின்று அலகுடைக்கும் நெடுஞ்சொற்கள் தோன்றினவென்றும், அவை உயர்ந்த இசையிலும் அலகிலும் ஒலித்தனவென்றும், அவற்றினின்றே பிற்காலச் சொற்கள் தோன்றினவென்றும் கூறுவது. | | இது செசுப்பெர்சென் கொள்கை. | | வாய்க்கு வந்தபடி உணறும் இசையொலிகளினின்று, ஒழுங்கான பெயர் வினையிடைச் சொற்களும் அவற்றின் பல்வேறு வடிவுகளும் தோன்றினவென்பது, முட்செடிகளினின்று முக்கனிகளும் தோன்றின என்பதையே ஒக்கும். | | இனி, உணர்வொலிக் கொள்கை (Emotion Theory) என்பதும் ஒன்றுண்டு. | | இங்ஙனம் 18ஆம் நூற்றாண்டுமுதல் 20ஆம் நூற்றாண்டுவரை மேலை மொழிநூலார் மொழித் தோற்றத்தை ஆய்ந்துவந்ததும், இன்னும் உண்மைகாண இயலாத வராயிருக்கின்றனர். இதற்கு முந்தியல் இயன் மொழியாகிய தமிழை அடிப்படையாகக் கொள்ளாது பிந்தியல் திரிமொழியாகிய சமற்கிருதத்தை அல்லது ஆரியத்தை அடிப்படையாகக் கொண்டதே கரணியம். | | முழைத்தல்மொழி, (Inarticulate Speech), இழைத்தல்மொழி (Articulate Speech) என மொழி இரு வகைப்படும் என்பதையும்; இவற்றுள் முன்னது உணர்ச்சியொலிகள், விளியொலிகள் முதலிய எழுவகையொலி களாலும், பின்னது சுட்டொலி வளர்ச்சியாலும், ஆயினவென்பதையும், என் 'தமிழ் வரலாறு' என்னும் நூலிற் கண்டு தெளிக. | | | |
|
|