பக்கம் எண் :

100பழந்தமிழாட்சி

வகையும் நேரல்வகையுமான பணியும் உழவரால் அமைவதை நோக்கும்போது,


"பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்பர்
 அலகுடை நீழ லவர்"
                     (குறள். 1034)


என்று வள்ளுவரும்,


"பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை
 யூன்றுசால் மருங்கி னீன்றதன் பயனே
 ................................................
 பகடுபுறந் தருநர் பார மோம்பிக்
 குடிபுறந் தருகுவை யாயினின் 
 அடிபுறந் தருகுவர் அடங்கா தோரே"
              (புறம். 35)


என்று வெள்ளைக்குடிநாகனாரும்,


"புரப்போர் கொற்றமும் - உழவிடை விளைப்போர்" (சிலப். 10 : 149-50)


என்று இளங்கோவடிகளும், கூறியிருப்பது ஒரு சிறிதும் மிகை யாகாது.


     இருவகை வேளாளர்: வேளாளர், உழுதுண்பாரும் உழுவித் துண்பாரும் என இருவகையர். உழுதுண்பாருக்குக் கருங்களமர் காராளர் என்னும் பெயர்களும், உழுவித்துண்பாருக்கு வெண் களமர் வெள்ளாளர் என்னும் பெயர்களும் உரியன. உழவர், களமர், கடையர், வேளாளர் என்பன இருசாராருக்கும் பொதுவாகும். ஆயினும், ஈற்றுப் பெயர் தவிர ஏனையவெல்லாம் உழுதுண்பார்க்கே சிறப்பாக வழங்கின. அவருக்கு மள்ளர் என்னும் பெயருண்டு. அவர் தந்நிலத்தில் உழுவாரும் பிறர் நிலத்தில் உழுவாரும் என இரு நிலைமையர்.


     உழவித்துண்பார் பலர் வேள் எனவும் அரசு எனவும் பட்ட மெய்தி, அமைச்சரும் படைத்தலைவரும் மண்டலத் தலை வரும் சிற்றரசருமாகி, மூவேந்தர்க்கும் மகட்கொடை நேரும் தகுதி யராயிருந்தனர். கடை யெழு வள்ளல்களுட் பெரும்பாலார் வேளிரே.


     நிலவகை: நிலங்கள் இன்றிருப்பது போன்றே, நன்செய் புன்செய் வானாவரி (வானாங்காணி) என மூவகைப்பட்டிருந்தன. உழுது பயிரிடப்படுவது உழவுக்காடு என்றும், கொத்திப் பயிரிடப் படுவது கொத்துக் காடு என்றும் பெயர் பெற்றிருந்தன.


     செயற்கை நீர்வளம்: உழவுத்தொழிற்கு இயற்கை நீர்வளம் போதாவிடத்து, அரசரால் செயற்கை நீர்வளம் அமைக்கப்பட்டது. வெள்ளச் சேதம் நேராவாறும், பாய்ச்சலுக்கு வேண்டிய நீர் ஓடு மாறும், ஆற்றிற்குக் கரை கட்டலும்; நீரைத் தேக்க வேண்டுமிடத்தில்