| வேந்தன் கட்டளைகள் செய்யப்படும் பொத்தகம் கேள்வி வரி எனப்படும். நாட்டுத் தலைநகரிலும் கோட்டத் தலைநகரிலும், நிலப்பதிவு செய்யும் ஆவணக்களரியும் அறங்கூறவையம் என்னும் வழக்குத் தீர்ப்பு மன்றமும், இருந்ததாகக் தெரிகின்றது. அரசர் வழக்குகளை யும் அறங்கூறவையத்தாரின் தவறான தீர்ப்புகளையும், வேந்தனே கவனித்து வந்தான். வரிப் பணமும் புதையலும் சிற்றரசரிடும் திறையும் தோற்றுப் போன பகையரசர் கொடுக்கும் தண்டமும், வேந்தன் வருவாய்க ளாகும். பணம், அச்சிட்ட காசாகவும் நிறைப் பொன்னாகவும் இரு வகையில் வழங்கிற்று. அக்கம், காசு, காணம், பொன், மாடை முதலியன காசு வகைகள். பொற்காசுகளையும் பொற்கட்டிகளை யும் நோட்டஞ் செய்யும் அதிகாரிகள் வண்ணக்கர் என்னப்பட்டார். காசு - E. Cash. கோநகர்க்காவலும் பாடிகாவல் என்னும் ஊர்காவலும் போக்குவரத்துச் சாலைக்காவலும், இரவும் பகலும் ஒழுங்காய் நடைபெற்றன. "நிலன்அகழ் உளியர் கலன்அசைஇக் கொட்கும் கண்மா றாடவர் ஒடுக்கம் ஒற்றி வயக்களிறு பார்க்கும் வயப்புலி போலத் துஞ்சாக் கண்ணர் அஞ்சாக் கொள்கையர் அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர் செறிந்த நூல்வழிப் பிழையா நுணுங்குநுண் தேர்ச்சி ஊர்காப் பாளர் ஊக்கருங் கணையினர் தேர்வழங்கு தெருவில் நீர்திரண் டொழுக மழையமைந் துற்ற அரைநாள் அமயமும் அசைவிலர் எழுந்து நயம்வந்து வழங்கலின் கடவுள் வழங்கும் கையறு கங்குலும் அச்சம் அறியா தேமமாகிய மற்றை யாமம் பகலுறக் கழிப்பி" (மதுரைக். 641-53) என்னும் மதுரைக்காஞ்சிப் பகுதி, மதுரையில் ஊர்காவலர் பெருமழை பொழிந்த நள்ளிரவிலும் ஊக்கமாய்ச் சுற்றிவந்து ஊர் காத்தமையைத் தெரிவிக்கும். மருதநிலத் தலைநகரெல்லாம், அகழியாலும் பலவகைப் பொறிகளைக் கொண்ட கோட்டை மதிலாலும் சூழப் பெற்றிருந் தன. கிரேக்கரும் உரோமரும் மதில்வாயில் காவலராயிருந்தனர். |