பக்கம் எண் :

106பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

"கடிமதில் வாயில் காவலிற் சிறந்த
அடேல்வாள் யவனர்"
(சிலப். 14:66-7)

   கரி பரி தேர் கால் என்னும் நால்வகைப் படைகள் வேந்தனுக் கிருந்தன. தெரிந்தெடுக்கப்பெற்ற சிறந்த பொருநரைக் கொண்ட தனிப்படைப் பிரிவுகளுமிருந்தன. அவை தெரிந்த என்னும் அடைமொழியால் விதந்து கூறப்பட்டன.


எ-டு: "உத்தம சோழத் தெரிந்த அந்தள கத்தாளர்"
(S.I.I.II, 97)
அந்தளகம் மெய்ம்மறை (கவசம்)

   இனி, வேந்தன்மேல் அளவிறந்த பற்றுடையவராய், அவனுக் குத் துன்பம் நேர்ந்த வேளையில் உயிரைக்கொடுத்துக் காக்கவும் உடன் மாயவும் சூளிட்டுக் கொண்ட போர்மறவரு மிருந்தனர். அவர் வேளைக்காரர் எனப்பட்டார். அவர் உயிர் கொடுத்தல் செஞ்சோற்றுக் கடன் கழித்தல் எனப்பட்டது.

   வேந்தன் இறந்தபின், அல்லது துறந்தபின், அல்லது கழிபெரு மூப்படைந்தபின், அவன் மூத்த மகன், மூத்த மகன் இல்லாவிட்டால் இளைய மகன். மகனே இல்லாவிட்டால் மகள், மகளும் இல்லா விட்டால் தகுதியுள்ள நெருங்கிய உறவினன் முடிசூட்டப்பட்டார். தடாதகை யென்னும் கயற்கண்ணியார் பாண்டிநாட்டை யாண் டதையும், சேரமான் பெருமாள் நாயனார் சேரநாட்டை யாண்ட தையும் காண்க. முடிசூட்டு விழாவிலும் வேந்தன் பிறந்த நாளாகிய வெள்ளணி விழாவிலும், பிற சிறந்த நிகழ்ச்சிகளிலும், கோப்பேருந் தேவியும் உடன் கொலுவிருப்பாள்.

   காவிதி என்பது சிறந்த அமைச்சனுக்கும், ஏனாதி என்பது சிறந்த படைத் தலைவனுக்கும், வேள் அல்லது பிள்ளை என்பது சிறந்த குறுநில மன்னருக்கும், மாவரையன் என்பது சிறந்த அரசியற் கருமத் தலைவனுக்கும், எட்டி என்பது சிறந்த வணிகனுக்கும், சிறுதனம், பெருந்தனம், தலைக்கோல் என்பன நாடகக் கணிகையர்க்கும், வேந்தன் அளிக்கும் பட்டங்களாகும்.

   ஏனை + அரி = ஏனாரி (யானைகளை அழிப்பவன்) - ஏனாதி. த - ர ஒன்றிற்கொன்று போலியாக வரும். எ-டு: விதை - விரை, குரல்வளை - குதவளை(கொச்சையுலக வழக்கு). மாவரையன் -மாவரையம் - மாராயம்.

"மாராயம் பெற்ற நெடுமொழி யானும்" (தொல்.புறத்.8)

அரசியல் வினைஞர் ஊதியத்திற்குக் கைம்மாறாகக் கொடுக் கப்பட்டது, நெல்லும் பொன்னுமாயின் சம்பளம் என்றும், நிலமானியமாயின் உம்பளம் என்றும் பெயர் பெற்றன.