| ஒன்பது நரம்புள்ள முண்டகயாழ் 4 பண்மொழி நரம்பும், 3 ஒற்று நரம்பும், 2 ஆர்ப்பு நரம்பும் கொண்டது போலும்! தரப்புச் சித்தார் என்னும் முகமதியர் நரப்பிசைக் கருவியில், இன்றும் 11 ஆர்ப்பு நரம்புகள் கட்டப்பெறுதல் காண்க. அவற்றி னால் உண்டாகும் அதிர்வு இசையினிமையைக் கெடுத்ததினால், அவற்றை வரவரக் குறைத்துவந்து இறுதியில் அடியோடு நீக்கி விட்டனர். இசையின்ப வுணர்ச்சி பெருகப் பெருக, யாழ்கள் திருந்தி வந்திருக்கின்றன. வரவரத் திருந்துதலேயன்றித் திருந்தாமை இயற்கையன்று. அநாகரிக மாந்தர் இசைக்கருவிகளின் ஓசை மிகுதியையும், நாகரிக மக்கள் அவற்றின் இனிமை மிகுதியையும், இன்றும் விரும்புதல் இயல்பாயிருத்தல் காண்க. யாழ்ப்பத்தரின் மூடியாகிய போர்வை, முன்பு தோலாயிருந்து பின்பு பாதுகாப்பிற்காக மரமாக மாற்றப் பெற்றது. யாழின் அமைப்பை அறிய விரும்புவார், தஞ்சைஆபிராகாம் பண்டிதர் மகனார் வரகுண பாண்டியனார் ஆராய்ந்தெழுதிய பாணர் கைவழி என்னும் நூலைப் பார்க்க. அருட்டிரு விபுலானந்த அடிகளின் யாழ்நூல் அடிப்படையில் தவறியதால் முதற்கோணல் முற்றுங்கோணலாய்ப் போயிற்று. உலகிற் சிறந்த இசை இந்திய இசையே. அதிற் சிறந்தது தமிழிசை. அதையே இன்று உழையிசை யடிப்படையில் தாய்ப் பண்களையும் கிளைப் பண்களையும் வகுத்தும், பழந்தமிழ்க் குறியீடுகளையும் பண்ணுப்பெயர்களையும் வடசொல்லாக மாற்றியும், கருநாடக சங்கீதம் எனப் பெயரிட்டு வழங்கி வருகின் றனர். கேள்வியைச் சுருதியென்றும், நிலையை ஸ்தாய் என்றும், மொழிபெயர்த்திருத்தல் காண்க. கருநாடக சங்கீதத்திற்கு இலக் கணம் வகுத்த வேங்கடமகியும் (17ஆம் நூற்.)அதற்கு இலக்கியமாகத் தெலுங்குக் கீர்த்தனைகள் பாடிய தியாகராசரும் (18ஆம் நூற்.) தமிழ்நாட்டில் வாழ்ந்தவரே. கொட்டு, அசை, தூக்கு, அளவு என்னும் நாலுறுப்புகளை யுடைய தாளத்தை, அகக்கூத்திற்குரிய பதினொரு பாணிகளும் புறக்கூத்திற்குரிய நாற்பத்தொரு தாளமுமாக, ஐம்பத்திருவகைப் படுத்தியிருந்தனர். ஏழிசைக்குரிய எழுத்துகள் முதற்காலத்தில் ஏழ் உயிர்நெடில் களாயிருந்தன. அவை நிறவாளத்தி என்னும் சிட்டையிசைக்கு ஏற்காமையால் சரி க ம ப த நி என்னும் எழுத்துகள் நாளடைவிற் கொள்ளப்பட்டன. இவை சட்ஜம்,ரிஷபம் , காந்தாரம், மத்தியமம், பஞ்சமம், தைவதம், நிசாதம் என்னும் வடசொற்களின் முதலெழுத்துகளாகச் சொல்லப்படுகின்றன. இக் கொள்கை மத்தியமம் |