பஞ்சமம் என்னும் இரண்டிற்கே ஏற்கும். சமன் பட்டடை என்னும் இரு தென்சொற்களின் முதலெழுத்துகளே ச ப என்பது, சிலர் கருத்து. இவை யிரண்டுமன்றி, இசையின்பத்திற்கேற்ற ஏழெழுத் துகள் நாளடைவிற் பட்டறிவினின்று தெரிந்துகொள்ளப்பட்டன என்பதே, பெரும்பால் தமிழிசைவாணர் கருத்தாம். பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை, இசைப்பாணரும் யாழ்ப் பாணரும் குழற்பாணரும் மண்டைப் பாணருமான நால்வகைப் பாணரே பெரும்பாலும் தமிழ் நாட்டில் இசைவாணராயிருந்து தமிழிசையைப் போற்றி வந்தனர். "பாண் சேரியில் பாட்டுப் பாடுகிறதா?." என்னும் பழமொழியும், திருமுறைகண்ட சோழன் திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபில் வந்த ஒரு பெண்ணைக் கொண்டு தேவாரத்திற்கு இசை வகுப்பித்தமையும், இதைவலியுறுத் தும். ஆரியக் குலப்பிரிவினை ஏற்பட்டபின்,பாணர் தீண்டாதவ ராகித் தம் தொல்வரவுப் பாண்தொழிலை இழந்தனர். எழூஉம் இசைத் தொகையினின்று தோன்றிய ஏழ் என்னும் எண்ணுப் பெயரும், "தெய்வம் உணாவே மாமரம் புள்பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப" (அகத். 18) என்னும் தொல்காப்பிய நூற்பாவும், தமிழிசையின் தொன்மையை உணர்த்தும். "இனி இசைத்தமிழ் நூலாகிய பெருநாரை பெருங் குருகும் பிறவும் தேவவிருடி நாரதன் செய்த பஞ்சபாரதீய முதலா வுள்ள தொன்னூல்களு மிறந்தன" என்னும் அடியார்க்குநல்லார் கூற்றால், வடமொழி யிசைநூல்கட்கெல்லாம் தமிழ்நூல்களே முதனூலென அறிக. "அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்." (33) என்னும் தொல்காப்பிய நூற்பாவால், தமிழிசையின் யாழ்ச் சிறப்பு உணரப்படும். இதன் விரிவை என் முத்தமிழ் என்னும் நூலிற் காண்க. (2) நாடகம் நாடகம் என்பது தென்சொல்லே. நள்ளுதல் = பொருந்துதல், ஒத்தல். நள் - நளி என்பது ஓர் உவமவுருபு. நளிதல் ஒத்தல்.நளி - நடி ஒ.நோ: களிறு - கடிறு. நடித்தல் என்பது, இன்னொருவனைப்போல் அல்லது இல்லாததை உள்ளதுபோலச் செய்து காட்டுதல். நடி - நடம் - நட்டம் - ந்ருத்த (வ.) ஒ.நோ: வட்டம் - வ்ருத்த (வ.) |