பக்கம் எண் :

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்119

பிளவைகளையும் கரைப்பதும், ஒடிந்த எலும்பை ஒட்டவைப்பதும், முதியவரை இளைஞராக்குவதும், நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வாழ்விப்பதும் சித்தமருத்துவம்.

"மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்னிய மூன்று."
(குறள்.941)

ஆதலால், ஊதை (வாதம்) பித்தம் கோழை என்னும் முந்நாடி யையும் நாடி அதனால், இற்றைக் கருவிகளைக் கொண்டு தலை சிறந்த தேர்ச்சி பெற்ற மேலை மருத்துவரும் கண்டுபிடிக்க முடியாத,

"நோய்நாடி நோய்முதல் நாடி யதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்"
(குறள்.648)

சித்த மருத்துவனின் தெய்வத்திறமாம்.

நுள் - நள் - நாளம் - நாளி - நாழி - நாடி.

   நாடி பார்க்கும் திறமில்லாதான் மருந்தனே யன்றி மருத்துவ னாகான். இந்திய மருத்துவம் சித்தமருத்துவமே. ஆயுர்வேதம் என்னும் ஆரிய மருத்துவம், சித்த மருத்துவத்தின் வடநாட்டு வகையே. சேர வேந்தர் இருந்தவரை சித்த மருத்துவமா யிருந்த மலையாள மருத்துவம், இன்று ஆரிய மருத்துவமாய் மாறியிருத்தல் காண்க. ஒரே நோய்க்குப் பல மருந்துகள் உள. மருந்துகள் இடந்தோறும் வேறுபடும், ஆயின், மருத்துவமுறை ஒன்றே. ஆரிய மருத்துவம் வேர்களை மிகுதியாகக் கொண்டதென்றும், சித்த மருத்துவம் செந்தூரத்தை மிகுதியாகக் கொண்டதென்றும், சிலர் கூறுவர். அவர் அறியார். "வேர்பார், தழைபார், மெல்ல மெல்லச் செந்தூரச் சுண்ணம் பார்." என்பது சித்தமருத்துவப் பழமொழி யாகும். "ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை மருத்துவன்." என்பது, "ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை மருத்துவன்" என்றும் வழங்கும். சிறுபஞ்சமூலம், பெரும்பஞ்சமூலம் என்னும் ஈரைந்து வேர்களும், தமிழ்நாட்டிலேயே விளையும் தமிழ் மருந்துச் சரக்காம். மருந்து என்னும் பெயரே மணமுள்ள வேரையும் தழையையும்தான் குறிக்கும். மரு = மணம். மரு - மருந்து.

   சித்த மருத்துவத்தின் சிறந்த மருந்து, மூவகை உப்புச் சேர்ந்த முப்பு என்பதாகும். அது இரும்பு முதலியவற்றைப் பொன்னாக்கவும் ஓரிலக்கம் ஆண்டுகள் உயிர்வாழச் செய்யவும் வல்லதென, அதன் ஆற்றலை உயர்வுநவிற்சியாகக் கூறுவர்.

   "நெடுநா ளிருந்த பேரும், நிலையாக வேயினும் காயகற்பந் தேடி நெஞ்சு புண்ணாவர்." என்று தாயுமானவர் கூறியது, மூப்பை நோக்கித்தான் போலும்!

   அறுவை
(Surgery) முறையும் சித்தமருத்துவத்தி லிருந்தமை