(7) உருவம் (Sculpture) மண்ணால் உருவஞ் செய்பவர் மண்ணீட்டாளர் (மணிமே.28:37) மரத்தாலும் கல்லாலும் பொன்வகையாலும் உருவஞ்செய்பவர் கம்மியர்; சாந்தினாற் செய்பவர் கொத்தர் "கம்மியநூல் தொல்வரம் பெல்லை கண்டு" (திருவிளை. திருநகங்.38) கோயில் தேரும் கோபுரமும் உருவங்கள் நிறைந்தவை. பாவையுருவமும் பூதப்படிமையும் புகாரிலும் பிற நகர்களிலும் இருந்தன. (8) கட்டடம் மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் மணிமண்டபங் களும், மூவேந்தர் தலைநகர்களிலும் கோநகர்களிலும் மிகுந்திருந்தன. மாளிகை, கோபுரம், மணி, மண்டபம் என்னும் நாற்சொல் லும் தென்சொல்லே. மாலுதல் மாண்புறுதல். "மான்றபூண் முலையினாள்"(காஞ்சிப்பு. திருக்கண். 174). மால் பெருமை. மால் - (மாள்) மாண் - மாண்பு, மாட்சி - மாள் - மாளிகை -மாலிக்கா (வ.) = மாட்சிமைப்பட்ட மனை.} கோ. = அரசு, தலைமை. புரம் = உயர்வு, உயர்ந்த கட்டடம். புரை = உயர்ச்சி. "புரைஉயர் பாகும்" (தொல்.உரி.4). வேந்தன் இருந்த உயர்ந்த எழுநிலைக் கட்டடம் முதலிற் கோபுரம் எனப் பட்டது. பின்பு அதைப்போற் கோயிலில் அமைந்த எழுநிலை வான ளாவி அப் பெயர் பெற்றது. அதன் அமைப்புத் தேரை ஒத்ததாகும். கோபுரம் உள்ள நகர்களின் பெயர்களே, முதலில் புரம் என்னும் ஈறு பெற்றன. எ-டு: காஞ்சிபுரம், கங்கைகொண்ட சோழபுரம். வேந்தன் தன் தலைநகரை நாற்புறமும் நோக்கவும், தொலை விற் பகைவர் வரவைக் காணவும், பகைவர் முற்றுகையிட்டு உழிஞைப்போரை நடத்துங்கால் நொச்சிப் போரைக் கண்காணிக் கவும், அவன் அரண்மனையின்மேல் எழுநிலைகொண்ட ஓர் உயர்ந்த தேர்போன்ற கட்டடம் கட்டப்பட்டிருந்தது. அது புரம், எனப்பட்டது. புரம் = உயர்ந்த கட்டடமான மேன்மாடம். புரவி = உயர்ந்த சுவரைத் தாண்டும் குதிரை. புரம் என்பது, பின்பு புரத்தைக் கொண்ட அரண்மனை யையும் அதன் சூழலையும் (acropolis) குறித்து, அதன்பின், நகர் |