பக்கம் எண் :

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்127

"வானுட்கும் வடிநீள மதில்"
எய் இல் (ஏவறைகள்) உள்ளது எயில்.
(புறம்.18)
"செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை
உவரா வீகைத் துவரை"
(புறம். 201)
"செம்பிட்டுச் செய்த இஞ்சித் திருநகர்ச் செல்வம் தேறி" (கம்பரா. கும்ப.160)
"சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த" (சிலப். 17:35)

   சோ என்பது அரண்வகையே யன்றிச் சோணிதபுரம் என்னும் நகர்ப் பெயரன்று.
பாம்புரி, கொத்தளம் (Bastion), வாயிற் கோபுரம், பதணம்
(Rampart), ஞாயில் முதலிய பல வுறுப்புகளை யுடையது. கோட்டை மதில். சில நகர்களில் ஏழெயில்கள் இருந்தன. புறமதிலைச் சுற்றி அகழி இருந்தது.

   கோநகர்களைப் பகையரசர் முற்றுகையிட்ட காலத்தில் மறைந்தோடித் தப்பிக்கொள்ள, நெடுந்தொலைவிற்குச் சுரங்கம் அல்லது சுருங்கையென்னும் கீழ்நில வழிகளும் இருந்தன.

   கோட்டை - கொட்ட (வ.)
L. castrum E. caster. chester (suffixes of place names).

   புரம் - புர(வ.).,
OE. burg, burh. OS. burg, OHG, burug, ON. burg, Gorh. baurgs, E. borough, Sc. burgh.

   புரி - புரீ(வ.),
E. bury sfx. of place-name பாழி = நகர் Gk. polis.

(9) பொறிவினை (Machinery)

வேந்தன் தன் உரிமைச் சுற்றத்தோடு இன்பமாய் நீராடுவதற்கு, வேண்டும்போது நீரை நிரப்பவும் வடிக்கவும் நீர்ப்பொறி யமைந்த குளம் இருந்தது. அது இலவந்திகை யெனப்பட்டது.

"இலவந் திகையின் எயிற்புறம் போகி" (சிலப்.10:31)
"நிறைக்குறின் நிறைத்துப் போக்குறின் போக்கும்
பொறிப்படை யமைந்த பொங்கில வந்திகை"
(பெருங்.1:40:311-2)
"...................வளைவிற் பொறியும்
கருவிர லூகமும் கல்லுமிழ் கவணும்
பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும்
காய்பொன் உலையும் கல்லிடு கூடையும்