பக்கம் எண் :

128பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை அடுப்பும்
கவையும் கழுவும் புதையும் புழையும்
ஐயவித் துலாமும் கைபெயர் ஊசியும்
சென்றெறி சிரலும் பன்றியும் பணையும்
எழுவும் சீப்பும் முழுவிறல் கணையமும்
கோலும் குந்தமும் வேலும் பிறவும்"
(சிலப்.15: 207-6)

மதுரை மதில்மேல் அமைக்கப்பட்ட பொறிகளாகும். ‘பிறவும்’ என்பவற்றை அடியார்க்குநல்லார் நூற்றுவரைக் கொல்லி, தள்ளி வெட்டி, களிற்றுப்பொறி, விழுங்கும் பாம்பு, கழுகுபொறி, புலிப் பொறி, குடப்பாம்பு, சகடப்பொறி, தகர்ப்பொறி, அரிநூற்பொறி என்பர்.

  "முழுமுத லரணம்" (புறத்.10) என்றும், "வருபகை பேணார் ஆரெயில்"(புறத்.12) என்றும் தொல்காப்பியம் கூறுவது, மிளையும் (காவற்காடும்) அகழியும் சூழ்ந்து பல்வேறு பொறிகளைக் கொண்ட சோவரணையே.

"மாற்றவர் மறப்படை மலைந்துமதில் பற்றின்
நூற்றுவரைக் கொல்வியொடு நூக்கியெறி பொறியும்
தோற்றமுறு பேய்களிறு துற்றுபெரும் பாம்பும்
கூற்றம்அன கழுகுதொடர் குந்தமொடு கோள்மா.

"விற்பொறிகள் வெய்யவிடு குதிரைதொடர் அயில்வாள்
கற்பொறிகள் பாவையன மாடம்அடு செந்தீக்
கொற்புனைசெய் கொள்ளிபெருங் கொக்கெழில்செய் கூகை
நற்றலைகள் திருக்கும்வலி நெருக்கும்மர நிலையே.

"செம்புருகு வெங்களிகள் உமிழ்வதிரிந் தெங்கும்
வெம்புருக வட்டுமிழ்வ வெந்நெய்முகந் துமிழ்வ
அம்புமிழ்வ வேலுமிழ்வ கல்லுமிழ்வ ஆகித்
தம்புலங்க ளால்யவனர் தாட்படுத்த பொறியே.

"கரும்பொனியல் பன்றிகத நாகம்விடு சகடம்
குரங்குபொரு தகரினொடு கூர்ந்தரிவ நுண்ணூல்
பரந்தபசும் பொற்கொடி பதாகையொடு கொழிக்கும்
திருந்துமதில் தெவ்வர்தலை பனிப்பத்திருந் தின்றே."
(101-4)

என்னும் சிந்தாமணிச் செய்யுள்கட்கு

   "பொற்கொடிகள் பதாகையோடு கொழிக்கும் திருந்துமதில், மாற்றவர் மறப்படை அகழைக் கடந்து தன்னைப் பற்றின், அத் தெவ்வர் தலை பனிக்கும்படி நூற்றுவரைக்கொல்லி முதல் மரநிலை யீறாக வுள்ளவையும், செம்புருகுகளி முதலியவற்றை உமிழ்வனவாக யவனா