பக்கம் எண் :

140பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

தமிழ்
வியாழன்
வெள்ளி
காரி

வடமொழி்
பிருகஸ்பதி(குரு)
சுக்கிரன்
(சனி)


ஆங்கிலம்
Jupiter-Thursday
Venus-Friday
Saturn-Saterday
 

    வடமொழிக் கிழமைப் பெயர்களுள், மங்கள வாரம், சனி வாரம் ஆகிய இரண்டு தவிர மற்றவையெல்லாம் நேர் மொழி பெயர்ப்பா யிருத்தல் காண்க.

   ஆங்கிலப் பெயர்களுள், பின் ஐந்தும் பிற்காலத்தில் மாறி விட்டன. ஆயினும், எழுநாள் என்னும் கால அளவு மாறாதிருத்தல் காண்க.

   செவ்வாய் செந்நிறமுள்ளதென்றும், வியாழன் பொன்னிற முள்ளதென்றும், வெள்ளி வெண்மையானதென்றும், காரி கரிய தென்றும், கண்டறிந்தது வியக்கத்தக்க செய்தியாம்.

வியல் = 1. பெருமை.
"மூழ்த்திறுத்த வியன்றானை" (பதிற்.33:5)
2. அகலம்.
"வியலென் கிளவி அகலப் பொருட்டே." (தொல்.சொல் 354)
3. மிகுதி. (சிலப்.3,7, உரை).
வியல் - வியலன் - வியாழன்.
விள்ளுதல் = விரிதல், மலர்தல். விள் - விய் - வியல்.

   பிருகஸ்பதி என்னும் வடசொல் வியாழன் என்பதன் மொழி பெயர்ப்பாயிருப்பதோடு, பெருகு என்னும் தென்சொல்லின் திரிபை நிலைமொழி முதனிலையாகக் கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது.

பன்னிரு ஒரைகள்

வடமொழி இலத்தீன்


தமிழ்
மேழம்
விடை
இரட்டை
அலவன்
ஆளி
கன்னி
துலை
நளி
சிலை
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கர்க்கடகம்
சிம்மம்
கன்னி
துலா
விருச்சிகம்
சாபம்
Aries
Taurus
Gemini
Cancer
Leo
Virgo
Libra
Scorpion
Sagitarius