பக்கம் எண் :

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்141

சுறவம்
கும்பம்
மீனம்
மகரம்
கும்பம்
மீனம்
(Capricorn)
Aquarius
Pisces

    வடமொழியில் எல்லாப் பெயர்களும், இலத்தீனில் பதினொரு பெயர்களும், தமிழ்ச்சொற்களின் நேர் மொழிபெயர்ப்பாயிருத்தல் காண்க.

   முழுத்தல் திருளுதல். முழுத்த ஆண்பிள்ளை என்னும் வழக்கை நோக்குக. முழுது மொத்தம். முழு - முழா = திரண்ட முரசு. முழா - முழவு - முழவம். முழா - மிழா = திரண்ட மான்
(stag) . மிழா - மேழம் = திரண்ட செம்மறியாட்டுக்கடா. மேழம் - மேஷ(வ.) மேழம் - மேழகம் - ஏழகம் - ஏடகம் - ஏடு - யாடு - ஆடு.

   விடையும் கன்னியும் முன்னரே கூறப்பட்டன.

   துல்லுதல் = பொருந்துதல், ஒத்தல். துல் - துன். துன்னுதல் பொருந்துதல். துல் - துலை = ஒப்பு. இருபுறமும் ஒத்த நிறைகோல். துல் - துலா = துலை போன்ற ஏற்றம். துலா - துலாம் - துலான் = ஒரு நிறை. ஒ.நோ: ஒப்பு = துலை. ஒப்பராவி = துலை செய்வோன். கும்முதல் குவிதல். கம் - கம்பு - கும்பம் - கும்ப (வ.). மின் - மீனம் -மீன (வ.).

   பழந்தமிழ் நாட்டில் பன்னீ ரோரைப் பெயர்களே பன்னிரு மாதப் பெயர்களாக வழங்கிவந்தன.

   மதி - மாதம் - மாஸ(வ.). ஒவ்வொரு பிறைநிலையும் பக்கம் எனப்பட்டது. வளர்பிறை வெண்பக்கம் என்றும், தேய்பிறை கரும்பக்கம் என்றும் சொல்லப்பட்டன.

   பகு - பக்கம். பகு -
bhaj (வ.). பக்கம்-பக்ஷ(வ.).

   இருபத்தேழு நாள்களும், புரவி, அடுப்பு, ஆரல், சகடு, மான்றலை, மூதிரை, கழை, கொடிறு, அரவு, கொடுநுகம், கணை, உத்தரம், கை, அறுவை, விளக்கு, முறம், பனை, துளங்கொளி, குருகு, முற்குளம், கடைக்குளம், முக்கோல், காக்கை, செக்கு, நாழி, முரசு, தோணி எனப் பெயர் பெற்றிருந்தன. இவற்றிற்குப் பிற பெயர்களுமுண்டு. இவையல்லாத பொது உடுக்கள் வெள்ளி யெனப்பட்டன. புகைக்கோள்
(Comet) வால்வெள்ளி யெனப்பட்டது.
 
   ஒரு பகலும் ஓர் இரவும் சேர்ந்தது ஒரு நாள் என்றும், ஏழு நாள் கொண்டது ஒரு கிழமையென்றும், ஒரு வளர்பிறையும், ஒரு தேய்பிறையும் சேர்ந்தது ஒரு மாதம் என்றும், கதிரவன் பன்னீ ரோரைக் குள்ளும் புகுவது பன்னிரு மாதம் என்றும், அதன் ஒரு வட செலவும் ஒரு தென்செலவும் சேர்ந்து ஓர் ஆண்டென்றும் கணக