பக்கம் எண் :

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்145

8 நுண்மணல்
8 கடுகு
8 நெல்
12 பெருவிரல்
2 சாண்
4 முழம்
500 கோல்
4 கூப்பீடு
= 1 கடுகு
= 1 நெல்
= 1 பெருவிரல்
= 1 சாண்
= 1 முழம்
= 1 கோல் அல்லது பாகம்
= 1 கூப்பீடு
= 1 காதம்.

   அக்காலத்தில் அரசியலாரால் நிலம் எவ்வளவு நுட்பமாய் அளக்கப்பட்டதென்பது,
"இறையிலி நீங்குநிலம் முக்காலே இரண்டு மாகாணி அரைக்காணி முந்திரிகைக் கீழ் அரையே இரண்டுமா முக்காணிக் கீழ் முக்காலே நான்குமா அரைக்காணி முந்திரிகைக் கீழ் நான்கு மாவினால் இறைகட்டின காணிக் கடன்" என்பதால் விளங்கும்.

   இங்குக் குறிக்கப்பட்ட அளவு 1/52000 ஆகும்.

மேல்வாயிலக்கப் பேரெண்கள்

   தொல்காப்பியத்தில், இலக்கம் நூறாயிரம் என்னும் தொடர்ச்சொல்லால் குறிக்கப்பட்டாலும், இலக்கம் என்னும் சொல்லின்மையால், ஆயிரத்திற்கு மேற்பட்ட பேரிலக்கப்பெயர்கள் தமிழில் இல்லையெனப் பலர் ஐயுறுகின்றனர். தொல் காப்பியரே,

"ஐஅம் பல்என வரூஉம் இறுதி
அல்பெயர் எண்ணினும் ஆயியல் நிலையும்"
(393)

எனப் பல கோடிகளைக் குறிக்கும் பேரெண்களைக் குறித்த லால், இலக்கம், கோடி என்னும் எண்ணுப்பெயர்கள் அவர் காலத்தில் தமிழில் இல்லையென்பது பொருந்தாது.

"அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்"
(குறள். 954)

என்னும் குறளில், கோடி வந்திருத்தல் காண்க. அடுக்கிய கோடிகளைக் குறிக்கும் பேரெண்களிற் சில வருமாறு:

கும்பம்
கணிகம்
தாமரை
சங்கம்
வாரணம்
பரதம்
= ஆயிரங் கோடி
= பத்தாயிரங் கோடி
= கோடா கோடி
= பத்துக் கோடா கோடி
= நூறு கோடா கோடி
= இலக்கம் கோடிக் கோடா கோடி.

(1-ன் பின் 24 சுன்னங் கொண்டது.)