"ஐஅம் பல்என வரூஉம் இறுதி" என்று தொல்காப்பியர் (தொல்.393) குறிப்பாய் ஈறுபற்றிச்சொன்னவற்றை, "நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும் மையில் கமலமும் வெள்ளமும்" (பரிபா. 2:13-4) என்று கீரந்தையார் வெளிப்படையாய்க் கூறினார். கமலம் (வ.) தாமரை. தாமரை, குவளை என்பன ஐயீறு; கணிகம், சங்கம், வெள்ளம் என்பன அம்மீறு; ஆம்பல் பல்லீறு; நெய்தல் அல்லீறு. இதைத் தொல்காப்பியர் குறித்திலர். ஆம்பல் குமுதம் என்றும் குறிக்கப் பெறும். கும்பம், தாமரை, சங்கம், வாரணம் என்பன தூய தென் சொற்களே. இவற்றின் விளக்கத்தை என் வடமொழி வரலாறு என்னும் நூலிற் காண்க. சங்கம் சங்கு. தாமரை என்னும் எண்ணைப் பதுமம் என்று மொழிபெயர்த்துக் கூறுவர் வடவர்; முளரி என்று ஒரு பொருள் மறுசொல்லாற் குறிப்பர் கம்பர். தாமரை - தாமரச(வ.). சங்கு - சங்கம் - sankha (வ.) கணக்கு அல்லது கணிதநூல் எண்ணூல் எனவும் பெயர் பெறும். ஏரம்பம் என்னும் பண்டைத் தமிழ்க் கணிதநூல் இறந்துபட்டது. சிற்றிலக்கத்திற்கும் பேரிலக்கத்திற்கும் பெருக்கல் வாய்பாடி ருந்தது போன்றே, சதுர (square) வாய்பாடும் பண்டைக் காலத்தி லிருந்தது. அது குழிக்கணக்கு எனப்பெற்றது. குழித்தல் சதுரித்தல். அது ஓர் எண்ணை அவ் வெண்ணைக்கொண்டே பெருக்குதல். சிற்றிலக்கக் குழிப்பு சிறு குழியென்றும், பேரிலக்கக் குழிப்பு பெருங்குழியென்றும், பெயர் பெற்றன. குழி - குணி - gun (வ.). ழ - ண. ஒ.நோ: ஆழி - ஆணி - ஆழமாயிறங்குவது. ஆணிவேர் ஆழமாய் இறங்கும் வேர். தழல் - தணல். குணித்தல் பெருக்குதல், சதுரித்தல். குணி + அனம் = குணனம். (12) உடற்குறி நூல் (Physiognomy) தலை, கழுத்து, மார்பு, கைகால் முதலிய உறுப்புகளிலுள்ள வரி (இரேகை), மறு, மச்சம், சுழி முதலியவற்றைக்கொண்டும்; |