பக்கம் எண் :

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்15

 "வடவேங்கடம் தென்குமரி" என்னும் தொல்காப்பியச் சிறப்புப்பாயிர அடியிற் குறிக்கப்பட்டது குமரியாறே.

   பரதன் என்னும் மாவேந்தனின் மகளாகிய குமரியின் பெயரால், பெயர் பெற்றது குமரிக்கண்டம் என்பதும், தொல் கதைக்கட்டே.

   குமரி, கன்னி என்பன ஒருபொருட் சொற்களாதலால், குமரியாறு கன்னியெனவும் படும்.


"மன்னு மாலை வெண்குடையான்
   வளையாச் செங்கோ லதுவோச்சிக்
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
   புலவாய் வாழி காவேரி"


என்னும் சிலப்பதிகாரக் கானல் வரிப்பாடல், குமரியாற்றைக் கன்னி யெனக் குறித்தல் காண்க. கன்னி என்பதும் காளியின் பெயரே.

   கன்னி என்னும் சொல், மக்களினத்துப் பெண்ணைக் குறிக்கும் போது, பூப்படைந்து மணமாகாத பெண்ணைக் குறிக்கும். ஒரு பெண் வாழ்நாள் முழுதும் மணமாகா திருக்கலாமாதலால், இளங்கன்னி கன்னிகை யெனப்படுவாள். கை என்பது ஒரு குறுமைப்பொருள் பின்னொட்டு
(Diminutive suffix).

   ஒ.நோ: குடி(வீடு) - குடிகை (சிறுவீடு) - குடிசை.

   பூப்படையாத சிறுமியையும் மணமான பெண்ணையும், கன்னி யென்று சொல்லும் வழக்கமில்லை. கன்னி கழிதல், கன்னியழிதல், கன்னியழித்தல் என்னும் வழக்குகளை நோக்குக.
   கன்னி என்னும் சொல்லைக் கன்யா என்றும், கன்னிகை என்னும் சொல்லைக் கன்யகா என்றும், வடமொழியாளர் திரித்து, சிறுமி, மகள் என்ற பொருள்களிலும் வழங்குவர். அதற்கேற்ப, கன் (திகழ்), கன (சிறு) என்பவற்றை வேராகக் காட்டுவர்.

திகழ்தலைக் குறிக்கும் கன்னெனும் சொல் வலிந்து பொருத்து வதாகும். சிறுமையைக் குறிக்கும் கன என்னும் சொல் பூப்படைந்த பெண்ணிற்குப் பொருந்தாது. மிகச் சிறியதைக் குன்னியென்பது தமிழ்மரபு. குல் - குன் - குன்னி. குல் - குள் - குறு. நன்னியும் குன்னியும் என்பது பாண்டிநாட்டு வழக்கு. கன் - குன் - கன் (kana).

    கன்னுதல் என்பது பழுத்தலைக் குறிக்கும் ஓர் அருந்தமிழ்ச் சொல். வெப்பத்தினலாவது அழுத்தத்தினாலாவது உள்ளங்கை யிலும் உள்ளங்காலிலும் அரத்தங்கட்டிச் சிவந்துவிட்டால் அதை அரத்தங் கன்னுதல் என்பர். கனி(பழம்) என்னும் சொல் கன்னி (பழுத்தது) என்பதன் தொகுத்தலே. நகு என்னும் முதனிலை