| மாறுகோலம் பூண்டு நகர் முழுதுஞ் சுற்றிப் பொதுமக்கள் பேச்சைக் கவனித் தறிவதும், வழக்கிழந்தவர் தம்மிடம் முறையிட அரண்மனை வாயி லில் ஆராய்ச்சிமணி கட்டி வைப்பதும்,தெய்வச்சான்று வாயிலாய்த் தம் கூற்றை மெய்ப்பிப்பாரை ஊக்குவிப்பதும், எவ்வகையிலும் துப்புத் துலங்காத வழக்கின் உண்மையை அறிவிக்குமாறு இறை வனை வேண்டுவதும், பண்டைத் தமிழரசர் கையாண்ட வழிகளாகும். குற்றங்கட்குத் தண்டனை, இரப்போனென்றும் புரப்போ னென்றும் வேறுபாடுகாட்டாது நடுநிலையாய் நிறைவேற்றப்பட் டது. பொற்கைப் பாண்டியன் தன்கை குறைத்ததும், மனுமுறை கண்ட சோழன் தன் மகன்மேல் தேரைச் செலுத்திக் கொன்றதும் இதை வலியுறுத்தும். நாள்தோறும் காலையில் முரசறைவித்துக் கொடை வழங்கி யதுடன், அவ்வப்போது சிறுசோற்று விழாவும் அரசர் நடத்தி வந்தனர். ஊன்சோற் றுருண்டை வந்தவர்க்கெல்லாம் வழங்குவது சிறுசோற்று விழாவாகும். அரசர் தம் பிறந்தநாட் கொண்டாட்டமாகிய வெள்ளணி விழாவன்று, சிறையாளிகளை விடுதலை செய்வது வழக்கம். "அடித்தளை நீக்கும் வெள்ளணியாம்" (சிலப். 27:229) அரசர் அறிஞரின் அறிவுரைகட்குச் செவிசாய்த்ததோடு, அவர் சொன்ன குறைகளையும் நீக்கிவந்தனர். மனுமுறை கண்ட சோழன் தலைநகராகிய திருவாரூரில் கட்டப்பெற்றிருந்த ஆராய்ச்சிமணியை, கன்றையிழந்த ஓர் ஆவும் பயன்படுத்திற்று. அதை அவ் வரசனும் ஓர் உயர்திணைச் செயல் போன்றே ஏற்று, தன் ஒரே மகன்மீது தேரோட்டி முறைசெய்தான். இத்தகைய செய்தி வேறெந்நாட்டு வரலாற்றிலு மில்லை. பண்டைத் தமிழ் வேந்தர் மூவரும் இங்ஙனமே தம்மையுந் தம் மக்களையும் நடுநிலையாய்த் தண்டனைக்குள்ளாக்கி வந்தனர். வெள்ளைக்குடி நாகனார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனைப் பாடி, தம் நிலவரி நிலுவை நீக்கப்பெற்றார். கூனர் குறளர் ஊமையர் செவிடர் முதலிய எச்சப்பிறவியர் அரண்மனைகளில் அரசியர் இருக்கும் உவளகங்களில் குற்றேவல் செய்ய அமர்த்தப் பெற்றனர். "கூனும் குறளும் ஊமும் கூடிய குறுந்தொழில் இளைஞர் செறிந்து சூழ்தர ...................................................................... கோப்பெருந் தேவி சென்றுதன் தீக்கனாத் திறமுரைப்ப" (சிலப். 20: 17-21) |