"பிள்ளை நகுலம் பெரும்பிறி தாக .................. தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத் தானம் செய்தவள் தன்துயர் நீக்கிக் கானம் போன கணவனைக் கூட்டி ஒல்காச் செல்வத் துறுபொருள் கொடுத்து நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ!" (சிலப். 15:54-75) "பட்டோன் தவ்வை படுதுயர் கண்டு கட்டிய பாசத்துக் கடிதுசென் றெய்தி என்னுயிர் கொண்டீங் கிவனுயிர் தாஎன ............. ஒழிகநின் கருத்தென் உயிர்முன் புடைப்ப அழிதரும் உள்ளத் தவளொடும் போந்தவன் சுற்றத் தோர்க்கும் தொடர்புறு கிளைகட்கும் பற்றிய கிளைஞரின் பசிப்பிணி யறுத்துப் பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மல்!" (சிலப். 15:80-90) "பண்ணியம் அட்டியும் பசும்பதம் கொடுத்தும் புண்ணியம் முட்டாத் தண்ணிழல் வாழ்க்கை" (பட்டினப். 203-4) என்று, பட்டினப்பாலை பொதுப்படக் கூறுவதினின்று, அறவைச் சோறு அளிக்கும் ஊட்டுப்புரை யமைத்தல், வெளியூரார் தங்கச் சத்திரம் சாவடி போன்ற தாவளங்கள் கட்டுதல், வழிப்போக்கர்க்குச் சோலையொடு கூடிய குளம் வெட்டுதல் முதலிய அறங்கள், அக்காலத்துப் பெருவணிகராற் செய்யப்பட்டிருந்திருக்கும் என உய்த்துணரலாம். "கருமமும் உள்படாப் போகமுந் துவ்வாத் தருமமும் தக்கார்க்கே செய்யா - ஒருநிலையே முட்டின்றி மூன்றும் முடியுமேல் அஃதென்ப பட்டினம் பெற்ற கலம்.கக (நாலடி. 250) 5. வேளாளர் பண்பாடு வேளாளர் உழுதுண்பாரும் உழுவித்துண்பாரும் என இரு வகையர். முன்னவர் சிறுநிலக்கிழார்; பின்னவர் பெருநிலக்கிழார். வேளாளரின் சிறந்த பண்பு விருந்தோம்பல், அதனாலேயே உழவன் வேளாளன் எனப்பெற்றான். உழவுத் தொழிலும் வேளாண்மை எனப்பற்றது. "வேளாளன் என்பான் விருந்திருக்க வுண்ணாதான்" (திரிகடு. 112) விருந்தென்றது உறவினரும் நண்பருமன்றிப் புதிதாய் வருபவரை. |