பக்கம் எண் :

174பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

   பொதுமகளிரோடு சேர்த்தெண்ணப்படும் நாடகக் கணிகை யர் கூட, ஒரு கணவனொடு கூடி வாழ்வதைக் கொள்கையாகக் கொண்டிருந்தனர். அரசர்க்கும் பெருஞ்செல்வர்க்கும் காமக்கிழத்தி யராதற்குரியவர் அவரே. மாதவி கோவலனின் காமக்கிழத்தி யானமையும், அவன் கொலையுண்டபின் மகளொடு துறவு பூண்டமையும், காண்க.

   இங்ஙனம், தமிழர் முதன்முதல் நாகரிகப் பண்பாட்டைக் கண்டும், ஆரியர் வருமுன் எல்லாத் துறையிலும் தலைசிறந்த நாகரிகமும் பண்பாடும் உடையவராயிருந்தும், பிற்காலத்தில் அயலாரை நம்பி அடிமைப்பட்டும் அறியாமைப்பட்டும் வறுமைப் பட்டும் சிறுமைப்பட்டும் போயினர். இதன் விளக்கத்தை என் தமிழர் வரலாறு என்னும் நூலுட் காண்க.