பக்கம் எண் :

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்177

மன் = கருதியறியும் உயிரினம், மாந்தன்; மன்பதை = மக்கட் கூட்டம்.

man = thinking animal
மனம் - மனஸ்(வ.),
L. mens, E. mind.
மன் - மநு(வ.) - மநுக்ஷ்ய(வ.) = மாந்தன்.

   எண்ணும் திண்மை அல்லது கருதுந்திறன் என்று பொருள் படும் மன்திரம் என்னும் கூட்டுச் சொல், மந்திரம் எனத் திரிந்துள்ளது.

ஒ.நோ: மன் - மன்று - மந்து - மந்தை.
(மன்னுதல் = பொருந்துதல், கூடுதல், மன் - மனை)
முன் - முன்று - முந்து
பின் - பின்னு - பிந்து

   உறுதியான எண்ணம் (பிங்.) என்பதை அடிப்படைக் கருத்தாகக் கொண்டுள்ள மந்திரம் என்னும் சொல், பின்வருமாறு பல பொருள்களை உணர்த்தும்.

  1.  சூழ்வினை

  2. சூழ்வினைக்குழு.
    "மன்னவன் றனக்கு நாயேன் மந்திரத் துள்ளேன்"
    (கம்பரா. உருக்காட்.31)

  3. திருமன்றாட்டு.
    திருவைந்தெழுத்தும். திருவாய்மொழியும் போன்றவை திருமன்றாட்டாம். வாய்மொழி = வாய்க்கும் மொழி. வாய்த்தல் = உண்மையாதல், நிறைவேறுதல்.

  4. சமயக் கொண்முடிபு நூல்.
    எ-டு: திருமூலர் திருமந்திரம்.

  5. படைப்பு மொழி.
    இல்லதை உண்டாக்குவதும் தீயதை நல்லதாக்குவதும் படைப்பு மொழியாம்.

  6. கட்டுமொழி.
    இயற்கைப் பூதங்களின் இயக்கத்தையும் தீயவுயிரிகளின் தீங்கையும் கட்டுப்படுத்துவது கட்டுமொழியாம்.

  7. சாவிப்பு மொழி.
    இருதிணைப் பொருள்களையும் அழிப்பது சாவிப்பு மொழியாம்.