பக்கம் எண் :

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்21

    பாண்டியன் குதிரை கனவட்டம்; சோழன் குதிரை கோரம்; சேரன் குதிரை பாடலம்; குறுநில மன்னர் குதிரை கந்துகம்.

    உன்னி, கண்ணுகம், கலிமா, கிள்ளை, குந்தம், கூந்தல், கொக்கு, கொய்யுளை, கோடை, கோணம், துரங்கம், தூசி, பாய்மா, மா, மண்டிலம், வயமா முதலியன குதிரையின் பொதுப்பெயர்கள். மட்டம் என்பது சிறுவகைக் குதிரை. தட்டு என்பது நாட்டுக் குதிரை. மட்டத்தினும் சிறுவகை இளமட்டம். தேசி என்பது பெருங்குதிரை.

    குதிரை என்பது ஒரு சிறப்பு வகையின் பெயராகக் கூறப்பட் டிருப்பினும், உலக வழக்கிற் பொதுப்பெயராய் வழங்குவது அஃதொன்றே. குதிப்பது குதிரை. குதித்தல் தாண்டுதல். "கூற்றங் குதித்தலுங் கைகூடும்" என்னும் குறளடியை நோக்குக. (குறள். 269) .
உண்மை, வாய்மை, மெய்ம்மை என்னும் முச்சொல்லும், உள்ளம், வாய், மெய் (உடம்பு) என்னும் முக்கரணத்தையும் முறையே தழுவினவாகச் சொல்லப்படுவதுண்டு. இவற்றிற்கு வேறு பொருட் கரணியமும் உண்டு.

    சொல்லுதலின் வகைகளைக் குறிக்க. ஏறத்தாழ நாற்பது சொற்கள் தமிழில் உள்ளன. அவையாவன :

சொல் சிறப்புப் பொருள்
1. அசைத்தல்
2. அறைதல்
3. இசைத்தல்
4. இயம்புதல்
5. உரைத்தல்
6. உளறுதல்
7. என்னுதல்
8. ஓதுதல
9. கத்துதல்
10. கரைதல்
11. கழறுதல்
12. கிளத்தல்
13. கிளத்துதல்
14. குயிலுதல்,குயிற்று
15. குழறுதல
- அசையழுத்தத்துடன் சொல்லுதல். அசையழுத்தம் (accent)
- அடித்து (வன்மையாய் மறுத்து)ச் சொல்லுதல்.
- ஓசை வேறுபாட்டுடன் சொல்லுதல்.
- இசைக்கருவி யியக்கிச் சொல்லுதல்.
- அருஞ்சொற்கு அல்லது செய்யுட்குப் பொருள் சொல்லுதல்.
- ஒன்றிருக்க ஒன்றைச் சொல்லுதல்.
- என்று சொல்லுதல்.
- காதிற்குள் மெல்லச் சொல்லுதல்.
- குரலெழுப்பிச் சொல்லுதல்.
- அழைத்துச் சொல்லுதல்.
- கடிந்து சொல்லுதல்.
- இன்னதென்று குறிப்பிட்டுச் சொல்லுதல்.
- குடும்ப வரலாறு சொல்லுதல்.
- குயில்போல் இன்குரலிற் சொல்லுதல்.
- நாத் தளர்ந்து சொல்லுதல்.