16. கூறுதல 17. சாற்றுதல் 18. செப்புதல் 19. நவிலுதல் 20. நுதலுதல் 21. நுவலுதல் 22. நொடித்தல் 23. பகர்தல் 24. பறைதல் 25. பன்னுதல் 26. பனுவுதல் 27. புகலுதல் 28. புலம்புதல் 29. பேசுதல் 30. பொழிதல் 31. மாறுதல் 32. மிழற்றுதல் 33. மொழிதல் 34. வலத்தல் 35. விடுதல் 36. விதத்தல் 37. விள்ளுதல் 38. விளத்துதல் 39. விளம்புதல் | - கூறுபடுத்திச் சொல்லுதல். - பலரறியச் சொல்லுதல். - வினாவிற்கு விடை சொல்லுதல். - நாவினால் ஒலித்துப் பயிலுதல். - ஒன்றைச் சொல்லித் தொடங்குதல். - நூலின் நுண்பொருள் சொல்லுதல். - கதை சொல்லுதல். - பண்டங்களைப் பகுத்து விலை சொல்லுதல். - மறை (இரகசியம்) வெளிப்படுத்திச் சொல்லுதல். - நிறுத்தி நிறுத்திச் சொல்லுதல். - செய்யுளிற் புகழ்ந்து சொல்லுதல். - விரும்பிச் சொல்லுதல். - தனக்குத்தானே சொல்லுதல். - ஒரு மொழியிற் சொல்லுதல். - இடைவிடாது சொல்லுதல். - உரையாட்டில் மாறிச் சொல்லுதல். - மழலைபோல் இனிமையாய்ச் சொல்லுதல். - சொற்களைத் தெளிவாகப் பலுக்கிச் சொல்லுதல். - கேட்பார் மனத்தைப் பிணிக்கச் சொல்லுதல். - மெள்ள வெளிவிட்டுச் சொல்லுதல். - சிறப்பாய் எடுத்துச் சொல்லுதல். - வெளிவிட்டுச் சொல்லுதல். - (விவரித்துச்) சொல்லுதல். - ஓர் அறிவிப்பைச் சொல்லுதல். | ஒருவனிடத்தில் ஒன்றைக் கேட்கும்போது, தாழ்ந்தவன், "ஈ" என்றும், ஒத்தவன், "தா" என்றும், உயர்ந்தவன், "கொடு" என்றும், சொல்லவேண்டுமென்பது தமிழ்மரபு. ஒன்றுபடுத்தல் யானைக்கும் தேன் வண்டிற்கும் முகத்தின்முன் ஓர் உறிஞ்சி (proboscis) உள்ளது. இந்த ஒப்புமையைக் கண்ட முதற்காலத் தமிழர், இரண்டிற்கும் தும்பி எனப் பொதுப்பெயர் இட்டனர். தூம்பு - தும்பு - தும்பி = தூம்பு (குழாய்) போன்ற உறுப்பையுடையது. |