பக்கம் எண் :

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்29

வண்ணமும் வரணமும் என்க. முற்காலத்தில் தொழிற்பெயரா யிருந்த பல சொற்கள், பிற்காலத்தில் துணைவினை சேர்ந்தும் சேராதும் வினை முதனிலைகளாக வழங்குகின்றன. எ.டு: களவு செய், நகை. நிலம் பல படையாய் ஒன்றன்மேலொன்று அமைவதுபோல், சொற்களும் அமைகின்றன. திள், வள் என்னும் ஈரடிகளும் சொல்லாக்கத்தில் ஒத்திருத்தலைப் பின்வருஞ் சொற்களாற் காண்க.


திள் - திண்- திண்ணம் - திண்ணகம்.
     " - திண் - திண்டு - திண்டி. திண் - திணர்.
     " - திட்டு - திட்டம், திட்டை.
வள் - வண் - வண்ணம் - வண்ணகம்.
     " வண் - வண்டு - வண்டி. வண் - வணர்.
     " - வட்டு - வட்டம், வட்டை.

   வரணம் - வரணி. வரணித்தல் = வண்ணத்தால் வரைதல்போற் சொல்லாற் புகழ்தல். அல்லது விரித்துக் கூறுதல்.

   வரணி - வரணனை. வருணம், வருணி, வருணனை, என்பன வடசொல்லைப் பின்பற்றிய வழு வடிவங்கள். வரணம் என்பதே பாண்டிநாட் டுலக வழக்கு.

   வரணி - வர்ண (வ.) வரணனை - வர்ணனா(வ.)

   வண்ணம்-வண்ணி=வரணி. வண்ணி -வண்ணனை =வரணனை.

   அடிப்படைச் சொல் தமிழில்மட்டும் அமைந்திருப்பதும், வடமொழியில் மேற்படைச் சொல்லே அமைந்திருப்பதும், அவற்றின் முன்மை பின்மையைக் காட்டுதல் காண்க.

   இனி, "காக்கைக் காகா கூகை" என்னும் ஓரெழுத்துப் பாட்டும், "சென்னி முகமாறுளதால்" என்னும் காளமேகம் மும்மடி யிரட்டுறலும், இராமலிங்க அடிகளின் மாணவர் தொழுவூர் வேலாயுத முதலியார் பாடிய பதின்பங்கி (தசபங்கி), பதிற்றுப் பதின்பங்கி (சதபங்கி) என்னும் சொல்லணிகளும், அருணகிரியார் பாடிய திருப்புகழ் வண்ணங்களும்,பட்டினத்தார் பாடிய உடற் கூற்று வண்ணமும், அகப்பொருட் செய்யுள்களில் வரும் உள்ளுறை யுவமையும் போன்ற அருஞ்சுவை யின்பக் கூறுகள் வேறெம் மொழியிலக்கியத்திலும் காணக் கிடையா.


"முறஞ்செவி மறைப்பாய்பு முரண்செய்த புலிசெற்று
 மறந்தலைக் கொண்ட நூற்றுவர் தலைவனைக்
 குறங்கறுத் திடுவான்போல் கூர்நுதி மடுத்ததன்
 நிறஞ்சாடி முரண்தீர்ந்த நீள்மருப் பெழில்யானை