பக்கம் எண் :

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்63

"உப்பமைந் தற்றாற் புலவி அது சிறிது
மிக்கற்றால் நீள விடல்."
(குறள்.1302)

   பெண்டிர் எத்துணைக் கல்வி கற்றவரா யிருப்பினும், உழத் தியரும் இடைச்சியரும் மறத்தியரும் குறத்தியரும் பண்டமாற்றுப் பெண்டிரும் கூலியாட்டியரும் வேலைக்காரியரும் வறியவருமா யிருந்தாலொழிய, மணமானபின், மூப்படையுமட்டும், கணவரோடும் பெற்றோரோடும் அண்ணன் அக்கைமாரோடும் மாமியாரோடும் பாட்டன் பாட்டிமாரோடுமன்றி, வீட்டைவிட்டு வெளியே தனியே செல்லப் பெறார்.

   கணவனைப் பேணுதலும் சமையல் செய்தலும் பிள்ளை வளர்த்தலும் கணவனில்லாதபோது வீட்டைக் காத்தலுமே, பெண்டிர்க்கு இயற்கையால் அல்லது இறைவனால் வகுக்கப்பட்ட பணியென்பது, பண்டைத் தமிழர் கருத்து. மணமான பெண் வீட்டி லேயேயிருந்து வேலை செய்வதனாலேயே, அவளுக்கு இல்லாள், இல்லக்கிழத்தி, மனைவி, மனையாள், மனையாட்டி, மனைக்கிழத்தி, வீட்டுக்காரி என்னும் இடம்பற்றிய பெயர்களும், இல், மனை, குடி என்னும் இடவாகு பெயர்களும் ஏற்பட்டன.

   வீட்டிற்கு அல்லது இல்லத்திற்கு வேண்டிய பொருள்களை யெல்லாம் கணவனே ஈட்டவேண்டுமென்பதும், அதனால் மனைவி யும் இளமக்களும் இன்பமாய் வாழவேண்டுமென்பதும், பண்டை யோர் கருத்து.

"வினையே ஆடவர்க் குயிரே வாள்நுதல்
மனையுறை மகளிர்க் காடவர் உயிர்"
(135:1-2)

என்னும் குறுந்தொகைச் செய்யுளடிகள், இதனைப் புலப்படுத்தும்.

   இக்காலத்திற் காலைமுதல் மாலை வரை ஆடவர் கடுமையாய் உழைத்தும், குடும்பத்திற்குப் போதிய அளவு பொருள் தேடவோ உணவுப்பொருள் கொள்ளவோ முடியவில்லை. இதனாலேயே, பெண்டிர் வெளியேறி ஆசிரியப் பணியும் அரசியலலுவற் பணியும் ஆற்ற வேண்டியதாகின்றது. ஆகவே, இன்று அவர் கடமை இரு மடங்காய்ப் பெருகியுள்ளது. இந் நிலைமை மக்கட் பெருக்கையும் உணவுத் தட்டையும் காட்டுமேனும், இதற்கு அடிப்படைக் கரணியம் அரசியல் தவறே.

   பெண்டிரைத் தனியே வீட்டைவிட்டு வெளிப்போக்கா மைக்கு இன்னொரு கரணியமுமுண்டு. அவர் பொதுவாக ஆடவ ரால், சிறப்பாகக் காமுகரால், நுகர்ச்சிப் பொருளாகக் கருதப்படும் நிலைமை இன்னும் மாறவில்லை. ஆடவரை நோக்க, அவர் மென் மையர், வலுவற்றவர். இதனால் அவர்க்கு மெல்லியல், அசையியல்,