யிரவர். காதலிலும் ஆடவர் பெண்டிர்க்கு ஈடாகார். உடன் கட்டை யேறுதலும் உடனுயிர் விடுதலுமே இதற்குப் போதிய சான் றாகும். மறுமணஞ் செய்யாத கைம்மை நிலையும் பெண்டிர் சிறப்பைக் காட்டும். புலவர், அரசர், வணிகர். வெள்ளாளர் ஆகிய வகுப்புகளைச் சேர்ந்த பெண்டிர், கணவன் இறந்தபின், எட்டாம் நாள் இறுதிச் சடங்கில் மங்கலவணியும் பிறவணிகளும் நீக்கப்பெறுவர். அது தாலியறுப்பு எனப்படும். அதன்பின் வெள்ளாடை யணிந்து வேறெவரையும் மணவாமல் தம் எஞ்சிய காலத்தைக் கழிப்பர். அவர் உயர்குடிப் பிறந்தவர் எனப்படுவர். வீட்டைவிட்டு வெளியேறி உழவும் கைத்தொழிலும் அங்காடி விற்பனையும் கூலிவேலையும் தெருப் பண்டமாற்றும் செய்யும் பிற வகுப்புப் பெண்டிரெல்லாம், கணவன் இறந்தபின் தாலியறுப்பினும் மறுமணம் செய்துகொள்வர். அது அறுத்துக் கட்டுதல் எனப்படும் இனி, சில வகுப்புப் பெண்டிர், கணவன் உயிரோடிருக்கும் போதே தீர்வை என்னும் கட்டணத்தைக் கொடுத்துத் தீர்த்துவிட்டு வேறொருவனை மணந்துகொள்வதும் உண்டு. அது தீர்த்துக் கட்டுதல் எனப்படும். அது எத்தனை முறையும் நிகழும். அரசர் போர்க்களத்தில் தோற்றுத் தற்கொலை செய்து கொண்டாலும், பகைவராற் கொல்லப்பட்டாலும், அவர் தேவி யரும் மகளிரும் பகையரசர்க்கு அடிமையாகாதவாறு தீக்குளித்து இறப்பதுமுண்டு. கணவன் உயிரோடிருக்கும்வரை அவனுக்கு உண்மையான மனைவியாயிருந்து, அவன் இறந்தபின் வேறொருவனை மணப்ப தும், கணவன் இறந்தபின் மறுமணம் செய்யாதிருப்பதும், கற்பின் பாற்படுமேனும், அவற்றைத் தமிழகம் கற்பெனக் கொள்ளவில்லை. தமிழகக் கற்பு உலகத்திலேயே தலைசிறந்ததாகும். அது பண்பாட்டுப் பகுதியிற் கூறப்படும். இங்குக் கூறியவையெல்லாம் நாகரிகக் கூறுகளே. குடும்பத் தலைவன் இறந்தபின், ஈமக்கடனும் இறுதிச் சடங் கும் அவன் புதல்வரால், புதல்வன் இல்லாவிட்டால் அவன் உடமைக்கு உரிமை பூணும் உறவினனால் நடத்தப்பெறும். ஈமம் என்பது சுடலை. பிணத்தைப் புதைப்பதே தமிழர் வழக்கம். எரிப்பது ஆரிய வழக்கமே. ஆரியர் குலப்பிரிவினையால் பிராமணர்க்கு ஒப்புயர் வற்ற தலைமை எற்பட்ட பின் தமிழரும் அவர் பழக்கவழக்கங் களைப் பின்பற்றலாயினர். மக்கட் பெருக்கமும் நிலத்தட்டும் |