பக்கம் எண் :

66பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

எற்பட்ட பின் தமிழரும் அவர் பழக்கவழக்கங் களைப் பின்பற்றலாயினர். மக்கட் பெருக்கமும் நிலத்தட்டும் ஏற்பட்டுள்ள இக்காலத்தில், எரிப்பது பொருளாட்சி நூற்படி சிறந்ததாகத் தோன்றும்.

   பெண்மக்கள், திருமணத்தின்போது அணிகலமும் வெண் கல பித்தளை செப்பேனங்களும் பெறுவதனாலும், பிற்காலத்திற் பெற்றோரை ஆண்மக்கள்போல் உணவளித்துக் காக்கும் உரிமை யின்மையாலும், பெற்றோர் உடைமைக்கு உரிமையுள்ளவராகார்.

துறவறம்

   பட்டினத்துப் பிள்ளையார்போல் உலக வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்தோ, தாயுமானவர்போல் குருவினால் அறிவுணர்த்தப் பெற்றோ, சிவப்பிரகாசர்போல் இயல்பாகவே இல்லறத்தில் வெறுப்புக்கொண்டோ, இராமலிங்க அடிகள்போல் இளமையிலேயே கடந்த அறிவடைந்தோ, இளங்கோவடிகள்போல் உடன் பிறந்தார்க்குக் கேடுவராது தடுத்தற்பொருட்டோ, கோவல கண்ணகியர் தந்தையரும் மாதவி மணிமேகலையரும்போல் கண்ணன்ன உறவினர் நெடும்பிரிவைத் தாங்க முடியாமலோ, துறவு பூணுவது தொன்றுதொட்ட வழக்கமாகும்.
   குடும்பச் சண்டையாற் சடைவுகொண்டும் குடும்பப் பொறுப்பை நீக்கிக்கொள்ளவும், துறவு பூணுவதுமுண்டு. இவற்றுள் முன்னது சிறப்புடையதன்று; பின்னது பெருங்குற்றமாகும்.

   ஆண்டி, பண்டாரம், அடிகள், முனிவன், சித்தன் எனத் துறவியர் பலவகையர். ஆண்டி இரப்போன்; பண்டாரம் அறிவு நூல்களை நிரம்பக் கற்ற பண்டிதன்; அடிகள் உள்ளத் தூய்மையும் ஆவிக்குரிய
(spiritual) செய்திகளிற் பட்டறிவும் வாய்ந்தவர், பட்டினத் தாரும் தாயுமானவரும் இராமலிங்கரும்போல். இம் மூவரும் நாட்டிலிருப்பவர். முனிவரும் சித்தரும் மலையிலிருப்பவர்.

   முனிவர் அல்லது முனைவர் உலகப்பற்றை முற்றும் வெறுத்தவர். முனிதல் வெறுத்தல். முனைதல் வெறுத்தல்.

ஐயன் என்னும் சொல்விளக்கம்

   அள் = செறிவு. அள்ளல் = நெருக்கம். அள்ளாடுதல் = செறிதல். அள்ளிருள் = செறிந்த இருட்டு. அள்ளுதல் = செறிதல்.

  "சேரே திரட்சி"(தொல்.46) என்னும் நெறிமொழிப்படி, செறிவுக்கருத்தினின்று பெருமைக் கருத்துத் தோன்றும்.

  எ-டு. மொய்த்தல் = நெருங்குதல். மொய் = நெருக்கம், பெருமை.

  ளகர மெய்யீறு யகர மெய்யீறாகத் திரிதல் பெருவழக்கு.