பக்கம் எண் :

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்79

பாட்டை "உளியிட்ட கல்லையும்", "எட்டுத் திசையும்" என்னும் பட்டினத்தடிகள் பாடலையும் "அங்கிங்கெனாதபடி", "பண்ணேன் உனக்கான பூசை" என்னும் தாயுமானவர் பாடலையும் நோக்கி யுணர்க.

   இதன் விரிவை என் தமிழர் மதம் என்னும் நூலிற் கண்டு கொள்க.

   கடவுளையும் மறுமையையும் நம்பாத ஒரு சிறு கூட்டத்தாரும் அக்காலத்திருந்தனர். ஆயின், அறிஞர் அவரைக் கண்டித்தனர்.


"உலகத்தார் உண்டெண்ப தில்லென்பான் வையத்
 தலகையா வைக்கப் படும்." (குறள். 850)
"நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
 இல்லை யென்போர்க் கினனா கிலியர்."
(புறம். 29: 11-2)

"மறுமையொன் றுண்டோ மனப்பட்ட எல்லாம்
 பெறுமாறு செய்ம்மின்என் பாரே - நறுநெய்யுள்
 கட்டி யடையைக் களைவித்துக் கண்சொரீஇ
 இட்டிகை தீற்று பவர்."
(பழ. 108)
  

10. தொழில்கள்

(1) உழவு

"உண்டி முதற்றே உணவின் பிண்டம்
 உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே"
(புறம்.18)
"உழுவார் உலகத்திற் காணியஃ தாற்றா
 தெழுவாரை யெல்லாம் பொறுத்து"
(குறள்.1032)
"இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
 உழவிடை விளைப்போர்"
(சிலப். 10: 151-2)

உழவர், ஆதலால், ஒருநாட்டு வாழ்விற்கும் முன்னேற்றத்திற்கும் அடிப்படை உழவு என்பதைப் பண்டைத் தமிழ்மக்கள் உணர்ந் திருந்தனர்.

   உழவுத்தொழிற்கு இன்றியமையாதவை நிலம், நீர், விதை, எருது என்னும் நான்காம்.

   பண்டைத் தமிழர், ஐந்திணைகளுள் மருதத்தையும் நெய் தலையும் மென்புலமென்றும், குறிஞ்சியையும், முல்லையையும் வன்புலமென்றும் வகுத்திருந்தனர். மருதநிலத்தை நாடு என்றும், மற்ற நிலங்களைக் காடு என்றும் அழைத்தனர். குறிஞ்சிநிலத்தில் உழத்தக்க இடத்தை ஏர்க்காடு என்றும், உழத் தகாததைக் கொத்துக்