| காலம் என்றும், வேனிற்கால வேளாண்மையைக் கோடை என்றும் கூறினர். இன்று நடைபெற்று வரும் வேளாண்மை வினைகள் பத்தா யிரம் ஆண்டுகட்கு முன்புதொட்டே பண்டாடு பழநடையாய் வருவனவாகும். காடு வெட்டிக் களப்புதல், கல் பொறுக்குதல், எரு விடுதல், ஆழவுழுதல், கட்டியடித்தல், பரம்படித்தல் (தாளியடித்தல், பல்லியாடு தல், ஊட்டித்தல், படலிழுத்தல்), புழுதியுணக்கல், விதைத்தல், களையெடுத்தல், காவல் காத்தல். அறுவடை செய்தல், களஞ்சேர்த்தல், சாணையடைதல் (சூடு போடுதல், போரமைத்தல்), சாணை பிரித்தல், காயப் போடுதல், பிணையலடித்தல் (கடாவிடுதல், அதரி திரித்தல்), வைக்கோல் அல்லது சக்கை அல்லது கப்பி நீக்கல், பொலி தூற்றல், பொலியளத்தல், விதைக்கெடுத்தல், களஞ்சியஞ் சேர்த்தல் என்பன வானாவாரிப் புதுக்கொல்லை வேளாண்மை வினைகளாம். காடு வெட்டிக் களப்புதல் புதுக்கொல்லைக்கே நிகழும். பழங்கொல்லையாயின் , உரம்போடுதற்கு எருவிடுதலோடு கிடையமர்த்தலும் குப்பையடித்தலும் நிகழும். புன்செய் வேளாண்மையாயின், புழுதியுணக்கற்குப் பின்னும் களையெடுத்தற்கு முன்னும், நாற்றுப் பாவல், பாத்தி பிடித்தல், நீர் பாய்ச்சி நடுதல் ஒன்றரைவாடம் நீர் பாய்ச்சல் ஆகிய வினைகள் நிகழும். நன்செய் வேளாண்மையாயின், நாற்றுப்பாவல், பாத்தி பிடித்தல், நீர் பாய்ச்சல் தொளி(சேறு)க்கலக்கல், குழை மிதித்தல், நடுதல் என்னும் வினைகளும், அவற்றிற்குப்பின் களையெடுத்தல் முதலிய வானாவாரி வேளாண்மை வினைகளும், நிகழும். அகம், அகரம் = மருதநிலத்தூர். ஒ.நோ: L. agros, field. E. acre. ஏர் - E. ear, to plough, ME. eren, AS. erian, Ice. erja, Goth, arjan, L.arare. Gk. arow, I. plough. Ir, araim. E.arable = ploughable; earth = that which is ploughed. Root - ar. ஏர் என்னும் சொல் வடமொழியி லின்மை கவனிக்கத்தக்கது. காறு (கொழு) - AS. scear, ME. schar, Ger. schar, schaar, E. share. தொள் (தோண்டு) - E. till. AS. tilian, ME. tilien, Du. telen, தொள்-தொய். தொய்யாவுலகம்=தொழில் அல்லது வினைசெய்யா விண்ணுலகம். தொள்-தொழு-தொழில். உலக முதல் தொழில் உழவே. |