பக்கம் எண் :

84பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

கூடாரம் கூடம்போல் உள்ள படமாடம், கூட ஆரம் - கூடவாரம் - கூடகாரம்-கூடாரம். ஆரம் ஓர் ஈறு.

   எ - டு: கொட்டாரம், வட்டாரம், கடிகையாரம்-கடிகாரம்.

(3) கம்மியம்

   
கருத்தல் செய்தல். இது வழக்கற்றுப் போன ஒரு தமிழ் வினைச் சொல்.

   தமிழ்நாட்டிற் கருநிறமும் புகர்
(brown) நிறமும் பொன்னிற மும் உள்ளவர் தொன்றுதொட்டு இருந்துவருகின்றனர். பொன் னிறத்தைச் சிவப்பென்றும் வெள்ளையென்றும் சொல்வது வழக்கம். பொன்மை கருமை ஆகிய இருநிறம்பற்றியே, வெண்களமர் கருங்களமர், வெள்ளாளர் காராளர், வெள்ளொக்கலர் காரொக் கலர் என்னும் சொல்லிணைகள் எழுந்தன. காய்ப்பெறுமாறு வினை செய்யின் கருப்பர் அகங்கை கருப்பதும், சிவப்பர் அகங்கை சிவப்பதும் இயல்பு. இதுபற்றி வினைசெய்தலைக் குறிக்க, கருத்தல், செய்தல் என்னும் இரு சொற்கள் தோன்றின. கைகருக்குமாறு செய்வது கருத்தல்; சிவக்குமாறு செய்வது செய்தல்.
கரு - கருமம் = செய்கை. கரு - கருவி = செய்கைக்கு வேண்டும் துணைப்பொருள். கரு - கரணம் = செய்கை, கருவி. அணம் ஓர் ஈறு.

   இனி, கருமைச் சொற்குப் பெருமைப்பொருளு மிருத்தலால், கருத்தல் = மிகுத்தல் என்றுமாம். புதிதாய்ச் செய்யப்பெறும் ஒரு பொருள் ஏற்கெனவே யுள்ள அதன் வகையை மிகுத்தல் காண்க.
Make என்னும் ஆங்கிலச் சொல்லையும் magnus (great) என்னும் இலத்தீன் சொல்லினின்று திரிப்பர் ஆங்கிலச் சொல்லாராய்ச்சியாளர். தன்வினையும் பிறவினைப் பொருள் பயப்பது சொல்லாக்க மரபிற் கொத்ததே.

   ஒ.நோ: வெளுத்தல் = வெள்ளையாதல் (தன்வினை), வெள்ளையாக்குதல் (பிறவினை). வண்ணான் துணிகளை வெளுக்கிறான் என்பதில் வெளுத்தல் வினை பிறவினையாயிருத்தல் காண்க.

   கருமம் - கம்மம் = செய்கை. தொழில், கைத்தொழில் கொல் தொழில், கம்மியத் தொழில்.

கம்மம் = கம்மியத்தொழில்.
"கம்மஞ்செய் மாக்கள்" (நாலடி.393)
கம்மம் - கமம்.

   இவ் விரு வடிவும் முதலில் தொழில் என்றே பொருள்பட்டன. உலகில் முதல் தோன்றிய தொழில் உழவே. தொழில், கை என்னும்