கரை = கடற்கரை. "நாவாய் கரையலைக்குஞ் சேர்ப்ப" (நாலடி. 224) E. shore = "Land that skirts sea or large body of water" (C.O.D.) c(k) - sh : ஒ.நோ: L. curtus - E. short படகு - LL. barca, Gk. baris, E. short. ML. barga, variation of barca. E. barge ட - ர. ஒ.நோ: பட்டடை - பட்டரை, அடுப்பங்கடை- அடுப்பங்கரை, படவர்-பரவர். கொடுக்கு - ME.croc , ON. krokr, E. crook. குடகு - E. Coorg. நாவாய் - L. navis, Gk. naus, Skt. nau, E. navy (கப்பற்படை) நாவுதல்-கொழித்தல். நாவாய் கடல்நீரைக் கொழித்துச் செல்வது. "வங்கம் .....நீரிடைப் போழ" (255:1-2) என்னும் அகப்பாட்டுப் பகுதியை நோக்குக. கடலையும் கப்பலையும் காணாதவரும் நெடுகலும் நில வழியாய் ஆடுமாடுகளை ஓட்டிக்கொண்டு வந்தவருமாகிய இந்திய ஆரியர், நௌ என்னும் (படகைக் குறிக்கும்) வடசொல்லினின்று நாவாய்ச் சொல் வந்ததென்பது, வாழைப்பழத் தொலியை நட்டால் வாழை முளைக்கும் என்பது போன்றதே. கப்பல் - L. scapha, Gk. skaphos, Ger. schiff, OHG. scif, OS., ON., Ice., Goth, skip, OE. scip, F. esquif, Sp., Port, esquife, It. schifo, E. skiff, ship. கப்புகள் (கிளைகள்) போன்ற பல பாய்மரங்களை யுடையது கப்பல். L. galea, Gk. galaia, E.galley, galleon முதலிய சொற்களும், கலம் என்னும் தென்சொல்லோடு ஒப்புநோக்கத் தக்கன. OS., OE. segel, OHG. segal, ON, segl, E.sail என்னும் சொற்களும் சேலை என்பதை ஒத்திருப்பது கவனிக்கத் தக்கது. இங்ஙனம், கட்டுமரம் (E. catamaran) முதல் கப்பல்வரை, பல வகைக் கலப்பெயர்கள் மேலை யாரிய மொழிகளில் தமிழாயுள்ளன. நங்கூரம் - L. ancora, Gk. angkyra, Fr. ancre, E. anchor, Pers. langar. கவடி - E. cowry. |