நகரம் ண்,ள் என்ற மெய்களுக்குப் பின்வரின் ணகரமாகவும், ன், ல் என்ற மெய்களுக்குப்பின் வரின் னகரமாகவும் இரு வழியிலும் திரியும். ளகரத்தொடு புணர்ந்து நகரம் ணகரமாகும்போது, அவ்ளகரமும் ணகரமாகும். லகரத்தொடு புணர்ந்து நகரம் னகரமாகும்போது, அவ்லகரமும் னகரமாகும். உ-ம்:கண் + நீர் = கண்ணீர் - ண் + ந = ண்ண கள் + நீர் = கண்ணீர் -ள் + ந = ண்ண பொன் + நன்று = பொன்னன்று -ன் + ந = ன்ன கல் + நன்று = கன்னன்று - ல் + ந = ன்ன மேற்கூறிய புணர்ச்சிகளுள், நிலைமொழி யீறு தனிக்குறிலை யடுத்த மெய்யா யிருந்தால்தான், புணர்ச்சியால் தோன்றிய இரு ணகரமும் இரு னகரமும் நிற்கும்; நெடிலை அல்லது பல வெழுத்துகளை யடுத்த மெய்யாயின் ஒரு ணகரமும் னகரமுங் கெடும். உ-ம்: தூண் + நெடிது = தூணெடிது ஆள் + நலம் = ஆணலம் ஒரு ணகரம் கெட்டது. பனங்கள் + நன்று = பனங்கணன்று } மான் + நன்று = மானன்று கால் + நான்கு = கானான்கு ஒரு னகரம் கெட்டது. மகன் + நல்லன் = மகனல்லன் } ம் என்ற மெய் நகரத்தோடு புணரும்போது, தான் தனிக்குறிலை யடுத்த மெய்யாயின் நகரமாகத் திரியும்; நெடிலை அல்லது பலவெழுத்துகளை யடுத்த மெய்யாயின் கெடும். உ-ம்: வெம் + நீர் = வெந்நீர் - திரிபு வேம் + நீர் = வேநீர் பரம் + நெறி = பரநெறி } கேடு குறிப்பு : தந்நகரமும் றன்னகரமும் ஏறத்தாழ ஒன்றுபோல் ஒலிப்பதால், அவற்றை ஒன்றிற்கு இன்னொன்றாக எழுதக்கூடாது. எழுதின் பொருள் மாறும். உ-ம்: முந்நாள் = மூன்று நாள், முன்னாள் = முன் + நாள் தன்னலம் = தன் + நலம், தந்நலம் = தம் + நலம் தனிக்குறில் யகரமெய்யும் தனி ஐகாரமும் தனிக்குறிலை யடுத்த யகர மெய்யின் பின்னும் தனி ஐகாரத்தின் பின்னும் வரும் மெல்லினம் மிகும். உ-ம்: செய் + நன்றி = செய்ந்நன்றி கை + மாறு = கைம்மாறு |