பக்கம் எண் :

22கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்

வலிமிகும் இடங்கள் - Combination in which the Hard consonants are doubled

பின்வருமிடங்களில் வருமொழி முதலில் வரும் வல்லினம் கட்டாயம் மிகும்.

  1. 2ஆம் வேற்றுமைக்கும், 4ஆம் வேற்றுமைக்கும் பின்.(இங்கு வேற்றுமை யென்றது   வேற் றுமை விரியை)
    உ-ம்: பாடத்தைப் படித்தான். ஊருக்குப் போனான்.
     
  2. நிகழ்கால வினையெச்சத்திற்குப் பின் ( After the Infinitive Mood ).
    உ-ம். செய்யப் போனான்
     
    விரைவாகப் பேசினான்; வலியச் சொன்னான்.

    இங்கு ஆக என்னும் துணை வினை (auxiliary verb ) ஆகு என்னும் பகுதியடியாய்ப் பிறந்த நிகழ்கால வினையெச்சம்.
     
  3. யகரமெய்யீற்று இறந்தகால வினையெச்சங் () கட்குப் பின்.

    உ-ம்: போய்ப் படித்தான், ஆய்ப் போயிற்று.
    விரைவாய்ப் போனான்.

    விரைவாய் என்பதில், ஆய் என்னும் துணைவினை ஆ என்னும் பகுதியடியாய்ப் பிறந்த இறந்தகால வினையெச்சம்.
     
  4. தான, தத்த, தாத்த, தனத்த என்னும் சந்த வாய்பாட்டு இறந்தகால வினையெச்சங்கட்குப் பின்.

    தனி நெடிலடுத்த குறிலாய் வருவது தான வாய்பாடு.

    உ-ம்: ஒடிப்போனான்.
     
    இரு குறிலுக்கிடையில் வல்லின மெய் வருவது தத்த வாய்பாடு. (தமிழில் ஒரு சொல்லில் வல்லின மெய்க்குப்பின் வரும் எழுத்தெல்லாம் வல்லின உயிர்மெய்யாகவே யிருக்கும்.)

    உ-ம்: தட்டிச் சொன்னான், விட்டுக்கொடுத்தான்.
     
    தனிநெடிற்குங் குறிலுக்குமிடையில் வல்லின மெய் வருவது தாத்த வாய்பாடு.
    உ-ம்: சேர்த்துக்கொள், காத்துக்கொண்டான்,வாழ்த்திக்கொடு, மாற்றிப் பேசு
     
    குறிலிணைக்குங் குறிற்கு மிடையில் வல்லினமெய் வருவது தனத்த வாய்பாடு.

    உ-ம்: எடுத்துச்சொல், வருத்திப்பார்
    இணை = இரண்டு, சோடு.
     
    இங்குக் கூறப்பட்ட வாய்பாட்டுச் சொற்கள் பிற சொற்களோடு கூடி நிற்பினும் வலிமிகும் விதி தவறா. இது அடுத்த விதிக்கும் ஒக்கும்.