பக்கம் எண் :

பேரா.தெ.பொ.மீ.தமிழுக்கதிகாரியா? 53

-53-

 

6. பேரா.தெ.பொ.மீ.தமிழுக்கதிகாரியா?

 

தமிழில் அறிவன் என்று பெயரும். மேலும், புத்தரையே அறிவன் என்று பண்டைநாளில் வழங்கியிருக்கின்றனரே!

    ''... ... ... ... ... ... ... ... ... ...
    புனிதன் சினன்வரன் அறிவன் பிடகன்
    போதி வேந்தன் புத்தன் பெயரே'' (102)

    என்பது பிங்கலம்.

    8. ''சங்கம் என்பதை அப்படியே தள்ளிவிட முடியுமா?''
ஏன் தள்ளிவிட முடியாது? கழகம், மன்றம் முதலிய சொற்கள் இருக்கின்றனவே!

    ''கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து'' என்று பரஞ்சோதி முனிவர் பாடியிருக்கின்றாரே!  பிராமணர் வருகைக்கு முற்பட்ட முதலிரு கழகங்களிலும் சங்கம் என்னும் வடசொல் வழங்கியிருக்க முடியாதே!

    மேலும், சங்க (Sangha) என்னும் வடசொல்லின் வேராகிய சம் (sam) என்பது, கும் என்னும் தென்சொல்லின் திரிபே. கும்முதல் கூடுதல். கும் என்னும் முதனிலை ஆரிய மொழிகளில் ஒரு முன்னொட்டாகி, இலத்தீனில் உரஅ என்று இயல்பாயும்; ஆங்கிலத்தில் com, con, co என்றும், கிரேக்கத் தில் sym, syn என்றும்; வேத ஆரியத்திலும் சமற்கிருதத்திலும் சம் (sam) என்றும் திரிந்தும் நிற்கும்.

    கும் என்பதன் மூலம் உம் என்பதாம். உம்முதல் கூடுதல். இவ் வினை இன்று வழக்கற்றது. இது உகரத்தோடு கூடிவரும் க ச த ந ப ம  என்னும் அறு மெய்களோடும் சேர்ந்து, கும், சும், தும், நும், பும், மும் என்னும் அறு வேறு வழியடிகளைப் பிறப்பிக்கும். இவற்றுட் சில அகரமுதலாகவும் திரிந்துள்ளன. உகரமுதற் சொற்கள் மோனைத்திரிபு கொண்டு வேறுசில சொற்களைத் தோற்றுவிக்கும். எடுத்துக்காட்டில்லாதன இறந்துபட்டனவென அறிக.

எ-கா :

உம்: உம்முதல் = கூடுதல், இப் பொருளிலேயே இச்   சொல் எண்ணுப்பொருள் இடைச்சொல்லாகிய     கூட்டிணைப்புச் சொல்லாய் வரும்.

எ.கா :

  அறமும் பொருளும் இன்பமும்
  வந்தும் போயும்
  உம்-அம். அம்முதல்=கூடுதல், நெருங்குதல் பொருந்துதல்,   கலத்தல், 
  ஒத்தல்.
  அம்-அந்து-அந்தி = 1. இரவும் பகலும் கூடும் காலை.
  பகலும் இரவும் கூடும் மாலை.