'காலை யந்தியும் மாலை
யந்தியும்' (புறம்.34)
2. ஒரு தெருவோடு இன்னொரு தெருக்
கூடுமிடம்.
'அந்தியும் சதுக்கமும்' (சிலப்.14
: 213)
அந்தித்தல் = நெருங்குதல், கூடுதல்,
முடியிட்டுவைத்தல்.
அந்து - அத்து, அத்துதல் = சேர்த்துத்
தைத்தல்.
கும் : கும்முதல் = கூடுதல், கும் = கும்மல் -
L .cumulus.
கும் - கம்-கமம். கம்முதல் = கூடுதல்,
நிறைதல்.
'கமம்நிறைந்
தியலும்' (தொல்.உரி.57)
கும் - குந்து - கொந்து. குந்து - குத்து -
கொத்து.
கம் - கந்து = திரட்சி, திரண்ட தூண், சார்பு,
பற்றுக்கோடு.
சும் : சும்-சும்மை = தொகுதி.
சும் - சொம் = செல்வம். சொம் -
svam(Skt.)
சொம் - சொந்து - சொந்தம் = உடன்
கூடியது.
சொந்து - சொத்து.
சும் - சம் - சந்து = கூட்டு,
பொருந்து.
சந்து செய்தல் = இருபகைவரை ஒப்புரவாக்கிக் கூட்டி
வைத்தல்.
சந்து - சந்தை = விற்பாரும் கொள்வாரும்
கூடுமிடம்.
தும் தும்: துந்து-தொந்து-தொந்தம் = கூட்டு,
தொடர்பு, புணர்ச்சி.
தொந்தம் - dvandva(Skt.)
தொந்து - தொத்து = கொத்து , திரள்,
தொடர்பு.
நும்: நும்-நம்-நந்து. நந்துதல் = வளர்தல்,
தழைத்தல், பெருத்தல்.
பும் : பும் - (புந்து) - பொந்து - பொந்தன் -
பருத்தவன்.
பொந்தன் - போந்தான் = பருத்த
கோழி.
போந்து - போந்தி =
யானைக்கால்.
பொந்து - பொத்து, பொத்துதல் = சேர்த்தல்,
சேர்த்துத் தைத்தல்.
பொத்து - பொத்தை = பருமையானது,
பருமிளகாய்.
பொத்து - பொட்டு = பொருத்து.
பொட்டு + அணம் = பொட்டணம் (சேர்த்துக்
கட்டியது).
மும் மும்: முந்து-மொந்து-மொந்தன் = பருத்தவன்,
பருத்தது,
பருத்த வாழைக்காய்.
மொந்து - மொந்தை = சோற்றுத்
திரளை.
மொந்து - மொத்து - மொத்தம் =
திரட்சி.
|