''முந்நீர்
வழக்கம் மகடூஉவோ டில்லை'' என்று கி.மு.7ஆம் நூற்றாண் டினதான தொல்காப்பியம்
பண்டைத் தமிழ்க் கடல்வாணிகரைக் குறிக் கின்றது. குமரிக்கண்டத்து வடிம்பலம்ப நின்ற
பாண்டியன், சாலித் (சாவகம்) தீவிற்குச் சென்று அதைக் கைப்பற்றியதிலிருந்து, அல்லது
அதற்கு முன்பிருந்தே கீழைநாட்டு வாணிகத் தொடர்பு நம் நாட்டிற்கு இருந்து
வந்திருக்கின்றது. அகிலின் வகைகளை, "அருமணவன், தக்கோலி, கிடாரவன், காரகில் என்று
சொல்லப்பட்ட பல்வகைத்தாகிய தொகுதியும்" என்றே அடியார்க்குநல்லார்
குறிப்பிடுகின்றார். இதற்கு, ''இங்குக் கூறப்படும் பெயர்கள் இக்காலத்து வழங்காமையாற்
புலப்படவில்லை.'' என்று பர். உ.வே.சா. அடிக்குறிப்பு
வரைந்திருக்கின்றார்.
அருமணம் அல்லது அருமணவன்
என்பது ஒரு தீவுப் பெயராகத் தெரிகின்றது. அஃது அரிய மணப்பொருள்கள் விளைவது என்று
பொருள்படும் தமிழ்ப் பெயராகவும் இருக்கலாம்.
முதுபண்டைக் காலத்தில்
கிழக்கத்துத் தீவுகளையும் நாடுகளையும் தமிழரசர் கைப்பற்றியிருந்ததால், அவற்றுட் சில
இன்னும் தமிழ்ப் பெயர்களையே தாங்கி நிற்றலைக் காண்க.
எ-கா : |
மதுரை - மதுரா , மலையம் - மலாயா, பொருநை - போர்நியோ. |
சாலி என்பது யவ என்று வடமொழியில்
மொழிபெயர்க்கப்பட்டுப் பின்பு சாவா என்று வழங்கி வருகின்றது.
சுமதுரை (சுமதுரா -
சுமத்ரா) என்பது, சு என்னும் வடமொழி முன்னொட்டுப் பெற்றது.
அகில் என்பது பழஞ்
சேரநாடாகிய மலையாள நாட்டிலும் விளைகின்றது. அது வெள்ளகில். அதன் பிற வகைகளே
கீழ்நாட்டினின்று வந்தவை. அருமணம் என்னும் தீவினின்று வந்த யானை அருமணவன்
எனப்பட்டதால், தமிழ்நாட்டில் யானை யில்லை என்பது பெறப்படாது . இது பிறவற்றிற்கும்
ஒக்கும்.
அகில் என்னும் சொல்
முள்ளுள்ளது என்னும் பொருளது. அக்கு = முள், அகில். அக்கு + இல் = அக்கில் - அகில்.
''கள்ளி வயிற்றின்
அகில்பிறக்கும்'' என்றார்
விளம்பிநாகனார். கள் = முள். கள்ளி = முள்ளுள்ளது.
அகில் தமிழ்நாட்டினின்று
மேனாடுகட்கு ஏற்றுமதி யானதினால், மேனாடுகளிலும் அதன் தமிழ்ப் பெயரே திரிந்து வழங்கி
வருகின்றது.
அகலிம் (ahalim) என்பது எபிரேயம். அகலோக்கோன் (agallochon) என்பது கிரேக்கம்; அகலோக்கா (agallocha) என்பது இலத்தீனம்.
அகில் என்பதே மலையாளமும்,
அகலோ (agallo) என்பது மலாயம். அகரு (agaru) என்பது சமற்கிருதம். எல்லாவற்றிலும் பிற்பட்டது |