பக்கம் எண் :

மொழியதிகாரம்113

     கண்டம் என்னும் சொல்லை hkad. a என்றும், காண்டம் என்னும்
சொல்லை kƒda என்றும், முதலெழுத்தை வேறுபடுத்தி வடமொழியாளர்
மயக்கியிருக்கின்றனர்.

காந்தி - காந்தி (nt)

     காள் - காய் - (காய்ந்து) - காந்து. காந்துதல் = எரிதல்,
எரிதல்போல் நோதல், ஒளிவிடுதல், மிகச் சுடுதல், சோறு முதலியன
பற்றிக் கருகிப்போதல், எரிதல்போல் உறைத்தல், மிளகாய் போன்ற
காரமான பொருள் உடம்பிற்பட்டு எரிச்சலெடுத்தல். காந்து -காந்தி
= கடுவெப்பம், ஒளி.

காமம் - காம (இ. வே.)

     கவ - கவர்வு = விருப்பு. கவ - கா - காதல்.

     கா+அம்=காம் = விருப்பம், காமம். காம் + உறு = காமுறு.

     காமுறுதல் = 1. விரும்புதல்.

     "காமுறுவர் கற்றறிந்தார்" (குறள்.399). 2. வேண்டிக்கொள்ளுதல்.     

"கனைகதிர்க் கனலியைக் காமுறுத லியைவதோ"

(கலித்.16)

"காமுற்றா ரேறு மடல்"
(குறள். 1133)

     காம் + மரு (மருவு) = காமரு = விருப்பம் பொருந்துகின்ற,
     விரும்பத் தக்க.
     

"காமரு குவளைக் கழுநீர் மாமலர்"
(சிலப். 4 : 40)

     காமரு - காமர் = 1. விரும்பத்தக்க. "காமர் கடும்புனல்" (கலித்.39),
     அழகிய. "காமர் வண்ண மார்பில்" (புறம்.1:1)

     காமரு என்பதைக் காம்வரு என்று பிரிப்பதினும்,காம் மரு என்று
பிரிப்பதே சிறந்ததாகும். காம் - காமி = காமமுள் ளவன் - ள். காமித்தல்
= விரும்புதல், காமங்கொள்ளுதல்.

     காம் + அம் = காமம் = 1. விருப்பம்.

     "காமம் வெகுளி மயக்கம்" (குறள்.360) 2.ஓரம் (பக்கபாதகம்) "காமஞ்
செப்பாது கண்டது மொழிமோ" (குறுந்.2). 3.கணவன் மனைவியர் காதல்,
"காமத்துப்பால்". 4.புணர்ச்சி விருப்பம். "காமஞ் சாலா இளமையோள்"
(தொல்.996). 5.புணர்ச்சியின்பம். "காமத்திற் செம்பாக மன்று" (குறள்.1092).

     வடவர் காட்டும் கம் என்னும் மூலம் காம் என்பதன் குறுக்கமே.