காரம் - க்ஷார
கடு-கடி-கரி-கார்.
கார்த்தல் = உறைத்தல் (பிங்.). கார்ப்பு = உறைப்பு
(சூடா.). கார் - காரம் = உறைப்பு (சூடா.). கார்-காரம்= உறைப்பு, எரிச்சல்,
பிள்ளை பெற்ற பெண்டிர்க்குக் கொடுக்குங் காரமருந்து, கடுஞ்சுவை,
எரிக்கும் பொருள், காரவுப்பு, சாம்பலுப்பு, சலவைக்காரம், சாயக்காரம்,
வெண்காரம், சீனிக்காரம், அக்கரகாரம், கோளக நஞ்சு, அழிவு, சினம்.
காரிகை - காரிகா
கரு
- கார் = 1. கருமை. 2. கரியமுகில்.
3.
மழை. "கார்பெற்ற புலமேபோல்" (கலித். 38).
நீர்வளத்தினாலேயே
கண்ணிற்கினிய இயற்கைக் காட்சிகள்
தோன்றுவதால், நீரைக் குறிக்கும் சொற்கட்கு அழகுபொருள் தோன்றிற்று.
ஒ.நோ
: அம் = நீர், அழகு.
கார்
- காரிகை = 1. அழகு.
"கண்ணிறைந்த
காரிகைக் காம்பேர்தோட் பேதைக்கு" (குறள். 1272).
2.அணி.
"கழல்யாப்புக் காரிகை நீர்த்து" (குறள். 777). 3. பெண்.
"காலை
யெய்தினிர்
காரிகை தன்னுடன்" (சிலப். 11:67).
வடவர்
காட்டும் பொருந்தாப் பொருட்காரணம் வருமாறு:
க்ரு
= செய். காரக (ஆ.பா.) = செய்பவன். காரிகா (பெ.பா.) செய்பவள்,
நடிப்பவள்.
மக்களினத்தில்
அழகிற்குச் சிறந்தது பெண்பாலாதலின், அழகின்
பெயர் பெண்ணிற் காயிற்று.
காலம் - கால
கோல்
- கால் = கம்பு, தூண், தூண்போல் உடம்பைத் தாங்கும்
உறுப்பு, கால்போன்ற வண்டிச் சக்கரம், கால்போல் நீண்டு செல்லும்
நீர்ப்போக்கு, நீண்டியங்கும் காற்று, நீண்டு தொடரும் காலம்.
கால்
- காலம். கால் - காலை.
அம்மீறு
பெற்ற பின்னை வடிவினின்றே வடசொல் திரிந் துள்ளது.
கால் என்னும் முன்னை வடிவம் வடமொழியிலில்லை.
|