பக்கம் எண் :

மொழியதிகாரம்149

     'திரம்' ஒரு தொழிற்பெய ரீறு.

     எ-டு : மாத்திரம், மோட்டிரம் - மோத்திரம் = மூத்திரம்.

     சித்திரக் கம்மம் = ஓவிய வேலைப்பாடு  

"செந்நூல் நிணந்த சித்திரக் கம்மத்து"
(பெருங்.உஞ்சைக்.35:98).

.     சித்திரக்கம்மி = ஓவியத் தொழிலமைந்த ஆடைவகை

     (சிலப்.74 : 108,உரை)

     சித்திரச் சோறு = பலநிறச் சோறு.

"சித்திரச் சோற்றிற் செருக்கினேன்"
(அருட்பா. 6, அவாவறுப்பு. 7)

     சித்திரப் படம் = பல வண்ண அல்லது பூத்தொழிலமைந்த உறை.

     "சித்திரப் படத்துட் புக்கு" (சிலப்.7 : 1).

     சித்திரப் பாலடை, சித்திரப் பாலை என்பன பூண்டு வகைகள்.

     சித்திரப் புணர்ப்பு = வல்லெழுத்தை மெல்லெழுத்தாகக் கொள்ளும்
     சித்திரமாடம் = ஓவியம் வரைந்த மாளிகை.

     "பாண்டியன் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன்" (புறம். 59).

     சித்திரவண்ணம் = நெடிலுங் குறிலும் விரவிய ஓசை.

     "சித்திர வண்ணம்

நெடியவுங் குறியவும் நேர்ந்துடன் வருமே"
(தொல்.1478)

     செய்தல் = ஒத்தல்.

"வேனிரை செய்த கண்ணி"
(சீவக. 2490)

     செள்-செறு-செறி. செள் - செண்டு - செண்டை = இரட்டை.

     செள்-செய்-செ. ஒ.நோ: பொய்-பொ. பொத்தல் = துளைத்தல்.

     சித்திரம் - சித்திரி. சித்திரித்தல் = சித்திரம் வரைதல், சுவடித்தல்,
     வண்ணித்துப் பேசுதல்.

     வடவர் சித்ர என்பதைச் சித் என்பதன் திரிபாகக் கொண்டு,
தெளிவாய்த் தெரிதல், விளக்கமான நிறம், வண்ண வேறுபாடு,
வண்ணப்படம் என்று வலிந்து பொருத்திக் காட்டுவர். சித்திரித்தல்
என்னும் வினை வடமொழியிலில்லை.

சிதம்பரம் - சிதம்பர (c)

     சிற்றம்பலம் - (சித்தம்பலம்) - (சித்தம்பரம்) - சிதம்பரம்.