பக்கம் எண் :

மொழியதிகாரம்153

     கீர்த்தித்தல் = புகழ்தல்.

     "தான்றன்னைக் கீர்த்தித்த மாயன்" (திவ். திருவாய்.7:9:2).

     வ. கீர்த் = புகழ் (A.V.-அ. வே. கீர்த்-கீர்த்தி-இ.வே.

     இதற்குக் க்ரு (2) என்னும் சொல்லை மூலமாகக் கூறி, காரு=
புகழ்வோன், பாவலன் (இ.வே.) என்று எடுத்துக் காட்டுவர்.

சீரகம் - ஜீரக

     சீர் - சீரம் = சீரகம் (மூ.அ.). சீரம் - சீரகம்.

     உலகில் முதன்முதற் சிறந்த முறையிற் சமையல் தொழில்
தொடங்கியதும் அதற்குச் சீரகத்தைப் பயன்படுத்தியதும் தமிழகமே.

     "சிறுபிள்ளை யில்லாத வீடும் சீரகமில்லாத கறியும் செவ்வையா யிரா"
என்பது தொன்றுதொட்டு வழங்கும் பழமொழி.

     சீரகக்கோரை, சீரகச்சம்பா, சீரக வள்ளி என்பன ஒப்புமைபற்றிப்
பெயர் பெற்ற நிலைத்திணை (தாவர) வகைகள்.

     பொன்னளவையிற் சீரகம் என்பது ஓர் அளவு.

     5 கடுகு = 1 சீரகம், 5 சீரகம் - 1 நெல்.

"அளவிற்கு நிறையிற்கு மொழிமுத லாகி
யுளவெனப் பட்ட வொன்பதிற் றெழுத்தே அவைதாம்
கசதப வென்றா நமவ வென்றா
அகர உகரமோ டவையென மொழிப"




(தொல்.170)

என்னுந் தொல்காப்பிய எழுத்ததிகார நூற்பா வுரையில், "கழஞ்சு, சீரகம்,
தொடி, பலம், நிறை, மா, வரை, அந்தை" என்று இளம் பூரணரும்; "கழஞ்சு,
சீரகம், தொடி, பலம், நிறை, மா, வரை, அந்தை இவை நிறை" என்று
நச்சினார்க்கினியரும் கூறியிருத்தலையும், நோக்குக. செரி - (செரியகம்)
-சீரகம்.

     வடவர் மூலங்காட்டும் வகை:

     ஜீரக = ஜீரண. ஜ்ரூ - ஜீரண. ஜ்ரூ - கிழமாக்கு, கட்டுக்குலை, கரை,
     செரிக்கச் செய்.

     ஜ்ரூ என்பது கிழ என்னும் தென்சொற்றிரிபே. கிழம் என்னும்
     சொல்லைப் பார்க்க.

சீரை - சீர் (c)

     சிரைத்தல் = 1. மயிர் கழித்தல். ம. சிரெ. க கெரெ.

     2. செதுக்குதல். "புற்சிரைத்தல் செய்ய மாட்டீர்களோ" (ஈடு,3:9:6).

     சிரை - சீரை = 1. செதுக்கப்பட்ட மரப்பட்டை, மரவுரி.