|
"சீரை
தைஇய வுடுக்கையர்" (திருமுரு. 126).
2.
சீலை (பிங்.). சீரை - சீலை - சேலை.
வடவர்
காட்டும் மூலம் சி (ci). சி=அடுக்கு, அடுக்கிக் கட்டு.
சுக்கு - சுஷ்க
உள்-சுள்.
சுள்ளெனல் = சுடுதல். சுள் - சுள்ளை = பானை சட்டியும்
செங்கலும் சுடுமிடம். சுள்ளை - சூளை.
சுள்
- சுடு - சுடல் - சுடலை = சுடுகாடு.
சுள்-சுட்கு.
சுட்குதல் = காய்தல். வறளுதல். சுட்கம் - சுட்கு -
சுக்கு - சுக்குதல் = உலர்தல்.
சுக்கு
= காய்ந்த இஞ்சி (திவா.).
சுட்கம் - சுஷ்க
சுள்
என்று வடமொழியில் சுஷ் என்று திரியும். ஒ.நோ : உள் - உஷ்.
சுஷ்க
= உலர்ந்த பொருள்.
சுக்குச்
சுக்காய்க் காய்ந்து போய்விட்டது என்னும் வழக்குத் தமிழில்
இருந்தாலும், சுக்கு என்பது தமிழிற் சிறப்பாய் உலர்ந்த இஞ்சியைத்தான்
குறிக்கும். வடமொழியிலோ அது உலர்ந்த பொருள்கட் கெல்லாம்
பொதுவாகும்.
சுண்டம் - சுண்டா
= கள்
சுள்
- சுண்டு - சுண்டம் = கள். சுண்டு - சுண்டை = கள். சுண்டுதல்
= சுண்டக்காய்ச்சுதல், சுடுவதுபோற் கடுமையா யிருத்தல்.
சுண்டி - சுண்டி (h)
சுள்
- சுண்டு. சுண்டுதல் = காய்தல், நீர்வற்றுதல். சுண்டு - சுண்டி =
சுக்கு.
சுண்டு - சுண்ட்
(h)
இதுவே
மேலதன் மூலம். இவற்றிற்கு வடமொழியில் மூலம் இல்லை.
சுண்ணம் - சூர்ண்
(c)
சுள்-சுள்ளை-சூளை.
சுள் - சுண் - சுண்ணம் = நீற்றுதல், நீறு,
சுண்ணாம்பு, பொடி, பூந்தாது.
| "தாழைக்
கொழுமட லவிழ்ந்த சுண்ணம்" |
(மணிமே. 4: 18)
|
|