|
|
இங்க்கா
= இன்னும், கொஞ்ச்செமு = கொஞ்சம்,
அண்ட்டாரு = என்றார், எந்த்த = எவ்வளவு,
கும்ப்பு = கும்பு. |
இங்ஙனம்
ஆரியத்தன்மையடைந்த ங்க்க, ஞ்ச்ச, ண்ட்ட, ந்த்த,
ம்ப்ப என்னும் வல்மெலிவலி யிணைகள் முதன்முதல் வடுகிலேயே
தோன்றுகின்றன. தமிழில் இத்தகைய வொலிகள் மருந்திற்குங்
காணக்கிடையா. அதிலுள்ளவை யெல்லாம் ங்க, ஞ்ச, ண்ட, ந்த, ம்ப, ன்ற
ஆகிய மென்மெலிவலி யிணைகளே.
தெலுங்கிற்கு
வடக்கிலுள்ள திரவிட மொழிகளும், இங்ஙனம்
வலித்தே யொலித்துப் படிப்படியாக ஆரியமாய்த் திரிந்து, வட
இந்தியாவில் ஆரியமாகவே மாறிவிடுகின்றன. பெலுச்சித்தானத் திலுள்ள
பிராகுவி மூச்சொலியும் பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.
எ-டு
: கண் - khan, பால் - phalt.
தமிழின்
தென்மையை அறியாத வடவரும் மேலையரும் அவர்
வழிப்பட்ட கோடன்மாரும், ஆரியத்தில் மட்டுமன்றித் திரவிடத்திலுமுள்ள
எடுப்பொலிகளே தமிழில் எடுப்பில வொலிகளாக அடங்கிவிட்டன என்று
கூறுவர்.அவர்தம் அறியாமையை நடுநிலை யறிஞர் ஆய்ந்து காண்க.
(3)
முதனிலை விரிப்பு
எ-டு:
அடி - அடுச்சு, நட - நடுச்சு.
(4)
இடையின இடைச்செருகல்
எ-டு:
கிந்த - க்ரிந்த, பொத்து - ப்ரொத்து, மிங்கு-ம்ரிங்கு.
(5)
பெயர்ச்சொல் வடசொல்லாதல்
எ-டு:
கண்ட்ட(ப) - கண்ட்ட (பா), வந்த - சத, ஆலி(மனைவி)
- ஆலி (பெண்ணின் தோழி)
(6)
வினைச்சொல் வடசொல்லாதல்
எ-டு:
இச்சு (to offer) - யஜ்(வே.)
வத்து (must not, don't)
- மத் (பி.) - மா (a particle of
prohibition or negation)- மே(Gk).
மத்
என்னும் இந்திச்சொல் சூரசேனியில் மத்து என்றிருந் திருக்கும்.
வத்து என்னும் தெலுங்குச் சொல் வலது என்பதன் எதிர்மறையாம்.
வேதமொழியில் இது மா என்று குறுகியிருக்கின்றது.
(2)
வடதிரவிடம் (பிராகிருதம்)
பிராகிருதம்
என்பது சமற்கிருதம் தோன்றுவதற்கு முன்பு வேதக்
காலத்திலேயே, இந்தியா முழுதும் வழங்கிவந்த வட்டார
|