பக்கம் எண் :

28வடமொழி வரலாறு

     மொழிகளாகும். பிராகிருதம் என்னும் சொல், முந்திச் செய்யப்
பெற்றது அல்லது இயற்கையாக வுள்ளது என்று பொருள்படும். பைசாசி,
சூரசேனி, மாகதி, மகாராட்டிரி, திராவிடீ எனப் பிராகிருதம் ஐந்தாக
வகுக்கப் பெற்றிருந்தது. இவற்றுள் முன் நான்கே பெரும்பாலும் பிராகிருதம்
எனப்படும். அவற்றுள்ளும், மகாராட்டிரம் முதற்காலத்தில் பஞ்ச
திராவிடத்துள் ஒன்றாகக் கொள்ளப்பெற்றது. விந்திய மலைக்குத்
தெற்கேயுள்ள கூர்ச்சரம், மகாராட்டிரம்,ஆந்திரம், கன்னடம், திராவிடம்
(தமிழ்) ஆகிய ஐந்நாடுகளும் பஞ்ச திராவிடம் என வழங்கிவந்தன.
ஆகவே, முதற்காலப் பிராகிருதம், பைசாசம், சூரசேனி, மாகதி என்னும்
மூன்றே. இவற்றையும் மொழியளவி லன்றிச் சொல்லளவில் வேறு படுத்திக்
காட்டுவது வழக்கமன்று. மூவகைப் பிராகிருதச் சொற்களையும் பிராகிருதம்
என்று பொதுப்படக் குறிப்பதே வழக்கம்.

     வடஇந்தியப் பிராகிருதமும் ஒருகாலத்தில் திரவிட மாயிருந்து
திரிந்ததே. அது வேதக் காலத்திற்கு மிக முந்தியதாகும். ஆகவே,வேத
ஆரியர் வருகைக்கு முன், இந்தியப் பழங்குடி மக்கள் மொழிகளெல்லாம்,
தெற்கில் தமிழும் வடக்கில் திரவிடமுமாக இருவேறு
நிலைப்பட்டிருந்தனவென் றறிதல் வேண்டும். திரவிடமும் தென்திரவிடம்,
நடுத்திரவிடம், வடதிரவிடம் என மூவகைப் பட்டிருந்தது. தென்திரவிடம்
வடுகு போன்ற கொடுந் தமிழ்; நடுத்திரவிடம் மராட்டிரமும் குச்சரமும்;
வடதிரவிடம் வட இந்தியப் பிராகிருதம்.

     காலக் கடப்பினால் மட்டுமன்றி இடச்சேய்மையினாலும் மொழிகள்
திரிகின்றன. தமிழ் போன்ற இயன்மொழியில்தான் செம்மை என்னும்
வரம்பிட்டு, இலக்கிய வாயிலாகவும் உயர்ந்தோ ருலக வழக்கு வாயிலாகவும்
அதன் திரிபைத் தடுக்க முடியும். தெலுங்கு, மராத்தி, இந்தி, ஆங்கிலம்,
பிரெஞ்சு முதலிய திரிமொழிகளெல்லாம் திரிபினாலேயே தோன்றியுள்ளன.
ஆதலால், அவற்றின் திரிபைத் தடுக்குமாறும் விலக்குமாறும் இல்லை.
திரிபை நீக்கிவிடின் திரிமொழிகள் அவ்வம் மொழிகளாகா. தெலுங்குத்
திரிபை நீக்கிவிடின், அது தமிழாய்விடும்.
அங்ஙனமே பிரெஞ்சுத் திரிபை
நீக்கிவிடின், அது இலத்தீ னாகிவிடும்.

     திரிபிற்கு ஓர் எல்லையுமில்லை; ஒரு தனிப்பட்ட வகையு மில்லை.
திரிமொழிகள் பல்வேறு வகையில் மேன்மேலுந் திரியத்திரிய, புதுப்புது
மொழிகள் தோன்றிக்கொண்டே அல்லது பிரிந்துகொண்டே போகும்.
இதனால், ஓர் இயன்மொழிக்கும்