பழமுறையைப் பின்பற்றிவரும்
தமிழருள்ளும், ஒவ்வொரு குலத்தார்க்கும்
அவ்வக் குலத்தானே சமயக் குரவனாயிருத்தலை இன்றுங் காண்க.
இந்திய
ஆரியர் படையெடுத்துப் பிற நாடுகளைக் கைப்பற்றுமளவு
பெருந்தொகையினராய் வரவுமில்லை. அவருக்குள் பிராமணன், சத்திரியன்,
வைசியன், சூத்திரன் என்ற நாற்பாற் பகுப்புமில்லை. இப் பகுப்பெல்லாம்
பிற்காலத்தில் வடஇந்தியத் திரவிடரொடும் தென்னிந்தியத் தமிழரொடும்
தொடர்புகொண்ட பின்பு, ஆரியப் பூசாரியரான பிராமணர் அந்தணர்,
அரசர், வணிகர், வேளாளர் என்னும் தமிழ்ப் பொருளிலக்கணப்
பாகுபாட்டைப் பயன்படுத்திக்கொண்டு இந்தியர்க்குள் வகுத்தமைத்தவையே.
ஆரியர் வந்த காலத்தில் வடஇந்தியாவிற் குடியிருந்தவர் பெரும் பாலும்
திரவிடரே. ஆரியர் வடநாட்டுப் பழங்குடி மக்களொடு போரிட்டு நாடு
கைப்பற்றியதாக வேதத்திற் கூறப்பட்டிருப்ப தெல்லாம், பிராமணர்
திரவிடரைக் கொண்டு திரவிடரை வென்ற சூழ்ச்சியே இது. விரல்விட்
டெண்ணத்தக்க அகத்தியர் நாரதர் முதலிய ஒருசில வேதக்கால பிராமணர்
தென்னாட்டிற்கு வந்து, தம்மை நிலத்தேவ ரென்று கூறிச் சேர சோழ
பாண்டிய முத்தமிழ் நாட்டையும் அடிமைப்படுத்தியதையும்; அறிவாராய்ச்சி
மிக்க இவ் விருபதாம் நூற்றாண்டிலும், பிராமணர் தமிழர் முன்னேற்றத்
திற்கென் றமைக்கப்பெற்ற நயன்மைக் கட்சியைத் (Justice
Party)
தன்னலத் தமிழரைக் கொண்டே வீழ்த்தியதையும்; நோக்குவார்க்கு இனிது
விளங்கும்.
ஆரியர்
வருமுன்பே, தமிழர் இம்மை மறுமையாகிய இருமைக்கு
மேற்ற பல துறைகளிலும் உயர்நாகரிக மடைந்திருந் தனர். தமிழர் கண்ட
கலைகளும் அறிவியல்களுமே வடமொழியில் மொழிபெயர்க்கப்பட்டும்
விரிவாக்கப் பெற்றும் உள்ளன. மேலை யறிஞர் இதையறியாது இந்திய
நாகரிகம் முழுவதும் ஆரியரதென மயங்கிவிட்டனர். இஃது, ஓர் இரவலன்
தன் சூழ்ச்சியாற் புரவல னான பின், அவனை அரசர்குடிப் பிறந்தவனாகக்
ருதுவதொத்ததே.
இந்திய ஆரியரின் முதல் இலக்கியமான இருக்கு வேதத்தின்
காலம் கி. மு.1200-1000 என்று மாக்கசு முல்லரும் (Max Muller),
கி.மு.2400-2000 என்று வின்றர்நீட்சும் (Winternitz),
கி.மு.3000
ஆண்டிற்கு முன்னென்று சி.வி. வைத்தியாவும், கி.மு.4500-3000 என்று
யாக்கோபியும் (Jacobi), கி.மு.6000 என்று உலோகமானிய திலகரும்,
வெவ்வேறு கரணியமுங் கணிப்புங் கொண்டு கூறியுள்ளனர்.
|