இவருட்
கடையிருவரும், இருக்கு வேதத்திற் கூறப்பட்டுள்ள ஆரல்
(கார்த்திகை) நாண்மீனின்(நட்சத்திரத்தின்)
நிலையிலிருந்து கணித்துள்ளனர்.
கணியமுறைக் கணிப்பு கருத்து வேறுபாட் டிற்கும் ஐயந்திரிபிற்கும்
இடமானதாதலால், அறிவியன் முறைப்படி திட்டவட்டமானதன்று.
ஆரிய
வருகைக்கு முற்பட்ட அரப்பா - மொகஞ்சதாரோ
(Harrappa-Mohenjodaro) நாகரிக முடிவுக்காலம்,
வயவர் சாண்
மார்சலால் (Sri John Marshal) கி.மு.3000 என
முடிவு செய்யப்
பெற்றுள்ளது. அந் நாகரிகத்திற்கும் வேத ஆரியர் நாகரிக நிலைக்கும்
யாதொரு தொடர்புமில்லை. வேத மந்திரங்களை நால்வேதமாக
வகுத்ததாகச் சொல்லப்படும் வியாசர் காலமாகிய பாரதக் காலம் கி.மு.1000
என, இந்திய வரலாற்றாசிரியரும் ஆராய்ச்சியாளரும் பொதுவாக ஒப்புக்
கொண்டுள்ளனர். மொகஞ்சதாரோ நாகரிகத்திற்கும் இந்திய ஆரியர்
வருகைக்கும் இடையே நெட்டிடை கழிந்திருக்கு மாதலாலும்;
பல்லாயிரக்கணக் கான வேத மந்திரங்கள் (10415) இயற்றப்படவும், அவை
நால்வேறு தொகுப்புகளாக (ஸம்ஹிதைகளாக)த் தொகுக்கப்
பெறவும், வேத
ஆரியர் சிந்துவெளி கங்கைவெளி முழுதும் பரவவும், குறைந்த பக்கம் 500
ஆண்டு சென்றிருக்குமாதலாலும்; இந்திய ஆரியர் வருகைக்காலம்
கி.மு.2000-1500 எனக் கொள்வது எல்லா வகையிலும் மிகப்
பொருத்தமானதாகும்.
இந்திய
ஆரியரின் முதல் இலக்கியமாகிய வேதம் இந்தியா
விலேயே இயற்றப்பெற்றது; தமிழ் மதங்களாகிய சிவநெறி திருமால் நெறி
ஆகிய இரண்டொடும் சிறிதும் தொடர்பற்றது. ஆரிய மதமாகிய
சிறுதெய்வ வேள்வி வணக்கத்தைத் தமிழரும் திரவிடரும்
ஏற்றுக்கொள்ளாமையின், ஆரியர் அடுத்துக் கெடுத்தல் முை`றயில் தமிழ்
மதங்களையே மேற்கொண்டு, புதுத் தெய்வங்களைப் படைத்தும் பல்வேறு
புராணம் என்னும் தொல்கதைகளைக் கட்டியும், அவற்றை ஆரியப்படுத்தித்
தமிழையுங் தமிழ்ப் பூசாரியரையும் தள்ளிவிட்டு, பிராமணரே
ஆரியமொழியிற் கோயில் வழிபாடு செய்துவரும்படி ஏற்பாடு
செய்துவிட்டனர்.
வேதத்
தெய்வங்கள்
(1) சில தெய்வங்கள்
மேலையாரியத் தெய்வங்கள்
எ-டு:
|
பெயர்
மாறாத் தெய்வம்
இ.வே. (R.V)பர்ஜன்யா (மழைத் தெய்வம்)
Lith. perkunas. Goth. fairguni, Ice. fiorgyn. |
|