பக்கம் எண் :

முன்னுரை37

தமிழ் தியூத்தானியம் இலத்தீனம் கிரேக்கம் வேதமொழி
         
முன்-முன்னு (கருது) முன் - - மன்
         
மெது ஸ்மூத் - - ம்ருது
         
வதுவை திருமணம்,
மணமகள்)
வெத் (d)
(மண)
- - வதூ(dh)

(3) வேதம் இந்தியாவிலேயே இயற்றப் பெற்றது. இதற்கு
ஏதுக்கள் :

1. வேதமொழி பிராகிருதம் என்னும் வடதிரவிடச் சொற் கலந்தது. மேலையாரியத்திலும் தமிழிலும் தென்திரவிடத்திலும் இல்லாத வேதச் சொற்களெல்லாம் பெரும்பாலும் வடதிரவிடச் சொற்களே.
   
2. வேதமொழிச் சொற்றொடரமைப்பு, வடநாட்டு மொழிகள்போற் பெரும்பாலும் தமிழ் முறையைத் தழுவியது.
   
3. வடநாட்டு மொழிகள் போன்றே வேதமொழியும் எகர ஒகரக் குறிலற்றது. 4. வேதத்திற் சிந்துவெளியிலும் கங்கைவெளியிலு முள்ள இடம் பொருள்களே குறிக்கப்பட்டுள்ளன.
   

(4) வேத ஆரியர் வடநாட்டுத் திரவிடரிடைச் சிறுபான்மை யரா யிருந்ததினால் அவர் முன்னோர் மொழி வேதக் காலத்திலேயே வழக்கற்றுப் போய்விட்டது. அதனால், வேதவொலிகளைப் பலுக்கும் (உச்சரிக்கும்) முறையைக் கூறும் சிட்சை (சிக்ஷா) நூல்களும் வேதச் சொற்களின் பொருளை விளக்கும் நிருத்த (நிருக்த) நூலும் எழுந்தன.

9. வேத ஆரியர் தென்னாடு வருகை

நாரதமுனிவர் காஞ்சி வருகை

"கடவுள் மாமுனி நாரதன் முன்னொரு காலையின்
இடனு டைத்திருக் காஞ்சியின் ஏகம்ப நாதரைச்
சுடரும் மாடக யாழிசை யால்தொழு தேத்துவான்
தடவு வெள்ளிப் பருப்பத நின்றுந் தணந்தனன்."

                                   (காஞ்சிப்பு.தழுவக். 185)