பக்கம் எண் :

38வடமொழி வரலாறு

அகத்திய முனிவர் தமிழகம் வருகை

அகத்தியர் காசியின் நீங்கியது

"பாணித்தல் அமையும் இன்னே படர்கெனும் பவளச்செவ்வாய்
வாணிக்கு மணாளன் தன்னை விடைகொண்டு மகிழ்ச்சி கூர
ஆணிப்பொன் மாடக் கோயில் அகிலநா யகரை யன்பால்
பேணித்தாழ்ந் தெழுந்து காசிப் பெரும்பதி தணந்து போந்தான்."
(காஞ்சிப்பு. தழுவக். 218)

அகத்தியர் விந்தமலை யடைந்தது

"கச்சிமா நகரங் காணும் ஆதரங் கைம்மிக் கீர்ப்ப
நச்சணி மிடற்றார் பாத நகைமலர் மனத்துட் கொண்டு
பொச்சமில் மனையா ளோடும் வான்நெறிப் போது கின்ற
விச்சைதேர் முனிவன் தன்னைக் கண்டது விந்த நாகம்." (காஞ்சிப்பு. தழுவக். 219)

அகத்தியர் தண்டகக்கா டடைந்தது

"பண்டயன் பயந்தருள் பால கில்லரும்
முண்டரு மோனரு முதலி னோர்களத்
தண்டக வனத்துறை தவத்து ளோர்கடாம்
கண்டன ரிராமனைக் களிக்குஞ் சிந்தையார்." (3)
"ஐந்து மைந்து மமைதியி னாண்டவண்
மைந்தர் தீதிலர் வைகினர் மாதவர்
சிந்தை யெண்ணி யகத்தியற் சேர்கென
இந்து நன்னுதல் தன்னொடு மேகினார்." (26)
"விடர கங்களும் வேய்செறி கானமும்
படருஞ் சின்னெறி பைப்பய நீங்கினார்
சுடரு மேனிச் சுதீக்கண னென்னுமவ்
விடரி லானுறை சோலைசென் றெய்தினார்." (27)
"மறைவ லானெதிர் வள்ளலுங் கூறுவான்
இறைவ நின்னரு ளெத்தவத் திற்கெளி
தறைவ தீண்டொன் றகத்தியற் காண்பதோர்
குறைகி டந்த தினியெனக் கூறினான்." (34)
"வழியுங் கூறி வரம்பக லாசிகள்
மொழியு மாதவன் மொய்ம்மலர்த் தாடொழாப்
பிழியுந் தேனிற் பிறங்கரு வித்திரள்
பொழியுஞ் சோலை விரைவினிற் போயினார்." (35)