பக்கம் எண் :

முன்னுரை39

"ஆண்டகைய ரவ்வயி னடைந்தமை யறிந்தான்
ஈண்டுவகை வேலைதுணை யேழுலக மெய்த
மாண்டவர தன்சரண் வழங்கவெதிர் வந்தான்
நீண்டதமி ழாலுலகை நேமியி னளந்தான்."
(36)
                         (கம்பரா. ஆரணிய. அகத்தியப் படலம்)

அகத்தியர் காஞ்சி யடைந்தது

"குன்றிடை முட்டி மறுகுங் குரீஇயின் தடையுண் டழுங்கி
நின்ற அருக்கன் முதலொர் நெறிகொளச் செல்ல விடுத்துத்
தன்றுணைப் பாவையி னோடுஞ் சார்தரு தாபத வேந்து
மன்றலம் பூம்பொழிற் காஞ்சி வளநகர் தன்னைமுன் கண்டான்."
 
"கண்டு தொழுது வணங்கிக் கையிணை உச்சியிற் கூம்ப
மண்டிய காதலிற் புக்கு மரபுளிச் செய்கட னாற்றி
அண்டர் பிரானார் தளிகள் அனைத்தும் முறையான் இறைஞ்சிப்
பண்டை மறைகள் முழங்கும் படரொளி ஏகம்பஞ் சார்ந்தான்."
 
"மன்னியஇத் தமிழ்க்கிளவி மந்திரங்கள் கணித்தடியேன்
செந்நெறியின் வழுவாஇத் திருக்காஞ்சி நகர்வரைப்பின்
உன்னணுக்க னாகியினி துறைந்திடவும் பெறவேண்டும்
இன்னவரம் எனக்கருளாய் எம்பெருமான் என்றிரந்தான்." (காஞ்சிப்பு. தழுவக். 226 - 7, 245)


அகத்தியர் சையமலை யடைந்தது

"என்றிவை யுலக மெல்லாம் உய்யுமா றியம்பி வேளை
வென்றவர் தழுவித் தேற்றி விடைகொடுத் தருளப் பெற்று
வன்றிறல் முனிவர் கோமான் மகிழ்ந்தடி வணங்கிப் போந்து
தன்றுணைக் கிழத்தி யோடுஞ் சையமால் வரையைச் சார்ந்தான்."
                                    (காஞ்சிப்பு. தழுவக். 285)

அகத்தியர் பொதிகைமலை யடைந்தது

"சலம்ப டைத்தவா தாவிவில் வலன்றனைச் சவட்டிய      பெருநோன்பின்
வலம்ப டைத்தவன் அவ்வரை யணுகலும்
     மறிதிரைக் கடலாடை
நிலம்ப டைத்தது தொன்னிலை யாவரும்
     நிறைபெருங் களிகூர்ந்தார்
நலம்ப டைத்தசீர் உறுவனும் ஆயிடை
     வதிந்துதென் மலைநண்ணி"