பக்கம் எண் :

முன்னுரை41

வடஇந்தியாவிற் பெரும்பாலராயிருந்தார் என்பதையும்; அவர் காடு
கெடுத்து நாடாக்கினார் என்பது, அக்காலத்து நாவலந் தேயத்திற்
பெரும்பகுதி மரமடர்ந்த காடாயிருந்தது என்பதையுமே உணர்த்தும்.

     அகத்தியர் வருமுன்பே தமிழ் இருவகை வழக்கிலும் சிறந்து
வேதமொழியினும் உயர்ந்திருந்த தென்பதும், அவர் இறைவ னருளைத்
துணைக்கொண்டு தமிழ் கற்றுத் தேர்ந்து வழிநூ லியற்றினார் என்பதும்,
தமிழ்த் தோற்றம் வரலாற்றிற் கெட்டாதது என்பதும்.

"உழக்குமறை நாலினு முயர்ந்துலக மோதும்
வழக்கினு மதிக்கவியி னும்மரபி னாடி
நிழற்பொலி கணிச்சிமணி நெற்றியுமிழ் செங்கட்
டழற்புரை சுடர்க்கடவுள் தந்ததமிழ் தந்தான்."
"என்றுமுள தென்றமிழை இயம்பியிசை கொண்டான்."
                                   (ஆரணிய. 3 : 41, 47)

என்னும் கம்பர் கூற்றாலறியப் பெறும்.

     "உழக்குமறை" என்பது வேதமொழியின் திரிபு முதிர்ச்சி, செயற்கைத்
தன்மை, ஓதற்கருமை முதலியவற்றையும்; 'மதிக்கவி' என்பது தமிழ்ச்
செய்யுட் பொருட் சிறப்பையும்; ‘மரபு’ என்பது செந்தமிழ்ப் பண்பாட்டையும்
உணர்த்தும்.

     அகத்தியரைத் 'தமிழ் முனிவன்' என்று தமிழர் போற்றியது
புனைந்துரை பற்றியதேயன்றி இனஞ்சுட்டியதன்று. கான்சுத்தாந் தியசு
பெசுக்கியை வீரமாமுனிவர் என்றும், பர். உ. வே. சாமிநாதை யரைச்
சிலர் தமிழ்த்தெய்வம் என்றும் கூறுவதை நோக்குக.

     தண்டக அடவியில் தனித்தனியாகவும் கூட்டங் கூட்டமாக வும்
ஆரிய மறையோர் இராமர் காலத்திருந்தமை, அவர் வேதக் காலத்திலேயே
படிப்படியாகத் தென்னாடு நோக்கி வந்தமையைக் காட்டும் .

10. சமற்கிருதவாக்கம்

     வேத ஆரியர் தென்னாட்டுத் தமிழரோடு தொடர்பு கொள்ளுமுன்,
வடநாட்டில் இயற்றியவை யெல்லாம் வேதமந்திரங் களும்
பிராமணங்களுமே. அவற்றின் பின் ஏற்பட்ட ஆரணியகங் களும்
அவற்றின் முதிர்ச்சியான உபநிடதங்களும் தமிழ் ஓத்துகளின்
மொழிபெயர்ப்பே. சிறுதெய்வ வழுத்துகளாகிய வேத மந்திரங் கட்கும்,
முழுமுதற் கடவுளின் உருவிலா வழிபாட்டை அடிப்படை