என்று திருவள்ளுவரே
முதன்முதல் ஆரியத்தைச் சமயத் துறையிலும்
குமுகாயத் துறையிலும் கண்டித்தார்.
அதன்பின்,
கி.பி.2ஆம் நூற்றாண்டில், சுவாமிநாத தேசிகன் போல் தன்
வடமொழியாசிரியனால் ஏவப்பட்டுத் தமிழைப் பழித்த குயக்கோடனை,
நக்கீரர் சாவப் பாடினார் என்பது,
"ஆரிய
நன்று தமிழ்தீ தெனவுரைத்த
காரியத்தாற் காலக்கோட் பட்டானை" |
என்னும் வெண்பாப்
பகுதி உணர்த்தும்.
திருவிளையாடற்
புராணத்திலுள்ள,
"கண்ணு
தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து
பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமி ழேனை
மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ."
|
|
"தொண்டர்
நாதனைத் தூதிடை விடுத்ததும் முதலை
யுண்ட பாலனை யழைத்தது மெலும்புபெண் ணுருவாக்
கண்ட தும்மறைக் கதவினைத் திறந்ததுங் கன்னித்
தண்ட மிழ்ச்சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்" (திருநாட்.57-8) |
வடமொழிப் போராட்டத்தை
ஒருவாறு தெரிவிக்கின்றன.
17ஆம்
நூற்றாண்டிற் பாடப்பெற்ற,
"மறைமுதற்
கிளந்த வாயான் மதிமுகிழ் முடித்த வேணி
யிறைவர்தம் பெயரை நாட்டி யிலக்கணஞ் செய்யப் பெற்றே
யறைகடல் வரைப்பிற் பாடை யனைத்தும்வென் றாரி யத்தோ
டுறழ்தரு தமிழ்த்தெய் வத்தை யுண்ணினைந் தேத்தல் செய்வாம்" |
என்னும் சீகாளத்திப்
புராணத் தமிழ்வாழ்த்துச் செய்யுளில்,
'உறழ்தரு'
என்னுஞ் சொல்,'ஒத்திருக்கின்ற' என்னும் பொரு ளினும்
'மாறுபடுகின்ற' என்னும் பொருளே சிறந்துபடுகின்றது.
18ஆம்
நூற்றாண்டிற் சிவஞான முனிவர் பாடிய,
"வடமொழியைப்
பாணினிக்கு வகுத்தருளி யதற்கிணையாத்
தொடர்புடைய தென்மொழியை உலகமெலாந் தொழுதேத்துங்
குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகரெனிற்
கடல்வரைப்பி லிதன்பெருமை யாவரே கணித்தறிவார்."
|
|