பக்கம் எண் :

52வடமொழி வரலாறு

"இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவர் இயல்வாய்ப்ப
இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தர் இசைபரப்பும்
இருமொழியும் ஆன்றவரே தழீஇயினார் என்றாலிவ்
விருமொழியும் நிகரென்னும் இதற்கையம் உளதேயோ"
(காஞ்சிப்பு. தழுவக். 248-9)

என்னும் செய்யுள்கள் மாறுபடும் இரு சாராரையும் ஒப்புரவாக்கும்
நடுவர் கூற்றுப்போல் ஒலிப்பதால்,
தென்மொழி வடமொழிப்
போராட்டத்தை மறைமுகமாகத் தெரிவிப்பனவே.

     19ஆம் நூற்றாண்டில், சுந்தரம்பிள்ளை தம் மனோன்மணீயத்
தமிழ்த்தெய்வ வணக்கச் செய்யுளில்.

(தரவு - 2)
 
"ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே."
 
(தாழிசை - 3)
 
"சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின்
முதுமொழிநீ யனாதியென மொழிகுவதும் வியப்பாமே."
 
(தாழிசை - 10)
 
"பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே."
 
(தாழிசை - 11)
 
"வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி."
 
(தாழிசை - 12)
 
"மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள்
கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ"

என்று வெளிப்படையாய் இப் போராட்டத்தைக் காட்டினார்.

இனி,

"ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்"

என்னும் பாடினார் பெயர் தெரியாத தண்டியலங்கார வுரைப் பழைய
வெண்பா, தமிழே உலகமுத லிலக்கியச்
செம்மொழி