யென்று
கூறி, அது ஆரியத்திற்கு மூலமென்பதை
ஏரணமுறையி லுணர்த்துகின்றது.
தென்மொழி
வடமொழிப் போராட்டம்பற்றிய உரைநடைப் பகுதிகள்
பலவாகவும் விரிவாகவுமிருத்தலின், அவை இங்குக் கூறப்பட்டில.
1916ஆம்
ஆண்டு, மறைமலையடிகளும் அவர்களின் அருமை
முதன்மகளார் நீலாம்பிகை யம்மையாரும் வடசொல் லுள்ளிட்ட வேற்றுச்
சொற்களைக் களைந்து நல்லுரமிட்டு நன்னீர் பாய்ச்சிக் கண்ணுங்
கருத்துமாய்ப் பேணி வளர்க்கத் தொடங்கியதினின்று, தமிழ்ப்பயிர்
தழைத்தோங்கி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து
வருகின்றது. அதே சமையத்தில், அகப் பகையும் புறப் பகையுமான
பல்வகைத் தமிழ்ப் பகைவரும், வேற்றுச் சொற்களை மீண்டும் மீண்டும்
ஊடு விதைத்துக்கொண்டும் விலங்கு பறவைகளை ஏவிக்கொண்டும்
வரத்தான் செய்கின்றனர். ஆயினும் அவர் படுதோல்வி யடைந்து
அடியோடு அழித்தொழிந்து போவது அண்ணணித்தே.
சென்ற
நூற்றாண்டின் இறுதியிலேயே, சூரியநாராயண சாத்திரியார்
தம் பெயரைப் பரிதிமாற் கலைஞன் என்று மாற்றித் தமிழர்க்குத்
தனித்தமிழுணர்ச்சி யூட்டினாரேனும், அது செயலளவில் தொடராது
உணர்ச்சியளவிலேயே நின்றுவிட்டது. அதனால், தேனும் பாலும் போன்ற
தூய தீந்தமிழ்ச் சொற்களால் உரைநடையுஞ் செய்யுளுமாகிய இருவடிவிலும்
பல்துறை தழுவி ஐம்பதிற்கு மேற்பட்ட அருநூலியற்றி, முதலிரு கழக
நிலைக்குத் தமிழைப் புதுக்கி அதற்குப் புத்துயிரளித்தவர், மாநிலத்தில்
மக்களுள்ளவரை மறையாப் புகழ் பெற்ற மறைமலையடிகளே.
|